சிந்தி
சிந்தி (வி)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
- பணம் எப்படிச் சேர்ப்பது என்று ஓயாமல் சிந்தித்து வந்தான் (அரசூர் பஞ்சாயத்து, கல்கி)
- நடந்ததையெல்லாம் ஆர அமரச் சிந்தித்து நிதானமாக எனக்குச் சொல் (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)
- போகும்போதும் வரும் போதும் பாடங்களின் குறிப்புகளைச் சிந்தித்து நடப்பேன். (அகல் விளக்கு, மு. வரதராசனார்)
- அவர்கள் எதற்காகத் தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தன்னால் ஆனமட்டிலும் சிந்தித்து முடிவு செய்ய முயன்றான் அவன் (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)
- கழிந்ததைக் குறித்துச் சிந்திக்கலாகாது.
(இலக்கியப் பயன்பாடு)
- சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை (நல்வழி, ஔவையார்)
- சந்திப்போமா? நாம் சந்திப்போமா? தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா?(பாடல்)
- மறுமையைச் சிந்தியார் சிற்றறிவினார் (நாலடி. 329)
- பொதுவியல்பு . . . கேட்டல் சிந்தித்தலென்னும் இருதிறத்தா னுணரப் படும் (சி. போ. சிற். பாயி. பக். 4)
- நம்மிறுதி சிந்தியாதவர் யார் (கம்பரா. யுத்த. மந்திரப். 106)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +