பேச்சு வழக்கு...உரையாடல்களில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர்..வெளியிடங்களுக்கு தன் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் செல்லும் ஒரு பெண், செல்லுமிடத்தில் மற்றவர்களின் வசதிகள், தேவைகள் சௌகரியங்கள் முதலானவற்றைப் பொருட்படுத்தாமல், சுயநலம் காரணமாக, தன் கணவன், தான் மற்றும் தன் பிள்ளைகளின் வசதி, தேவை ஆகியவைகளிலேயே குறியாகயிருந்து அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முயலும் தன்மையை சுவாமி காரியம் சுய காரியம் என அழைப்பர்...இந்தச் சொல்லின் சுவாமி என்பது கணவனையும், சுய என்பது 'தன்'என்பதையும் குறிக்கும் சொற்களாகும்...இந்தச்சொற்றொடரின் பயன்பாடு தற்சமயம் வழக்கொழிந்து வருகிறது...
'இந்தக் கோடை விடுமுறைக்கு உங்கள் அக்கா கோதை தன் புருஷன், ஐந்துபசங்களுடன் நம் வீட்டிற்கு வருவதாகச் சொல்லுகிறாள்...அப்படி வந்தால் சுவாமி காரியம் சுய காரியம் என்று இருப்பாளே!...நமக்கிருக்கும் வசதிக்கு, எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்!?'...