தமிழ்

தொகு
 
சூர்:
என்றால் மிளகு
 
சூர்:
என்றால் வால்மிளகு
 
சூர்:
என்றால் பேய்/அசுரன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சூர், பெயர்ச்சொல்.
  1. அச்சம்
    (எ. கா.) சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர் (பெருங். உஞ்சைக். 44, 22).
    (எ. கா.) மறந்திருக்கும் சுழல்கட் சூர்ப்பேய் (கலித்.)
  2. துன்பம்
    (எ. கா.) சூர்தான்வந் தழிவேன்றனை (இரகு. சீதைவ. 133).
  3. நோய் (பிங். )
  4. கடுப்பு
    (எ. கா.) சூர்நறா வேந்தினாள் (பரிபா. 7, 62).
  5. வஞ்சகம் (அக. நி.)
  6. கொடுமை
    (எ. கா.) சூரரமகளி ராடுஞ் சோலை (திருமுரு. 41).
  7. கொடுந்தெய்வம்
    (எ. கா.) உருமுஞ் சூரும் (குறிஞ்சிப். 255).
  8. தெய்வமகளிர்
    (எ. கா.) சுனைவாய் நிறைக்குஞ் சூருடைச் சிலம்பில் (பெருங். உஞ்சைக். 50, 40).
  9. காண்க....மிளகு (மலை.)
  10. காண்க....வால்மிளகு (மலை.).
  11. பேய்
  12. அசுரன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. fear
  2. suffering, affliction, sorrow
  3. disease
  4. pungency
  5. deceit, guile
  6. cruelty
  7. malignant deity
  8. celestial maidens
  9. black pepper.....காண்க....மிளகு
  10. cubeb......காண்க....வால்மிளகு
  11. devil or Asura


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூர்&oldid=1431616" இலிருந்து மீள்விக்கப்பட்டது