செம்முள்ளங்கி

தமிழ் தொகு

 
செம்முள்ளங்கி:
-
 
செம்முள்ளங்கி:
 
செம்முள்ளங்கி:
(கோப்பு)

பொருள் தொகு

  • செம்முள்ளங்கி, பெயர்ச்சொல்.
  1. செம்மங்கி
  2. மஞ்சள் முள்ளங்கி
  3. ஒரு கிழங்கு வகை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. carrot

விளக்கம் தொகு

  • பெரும்பாலும் கேரட் என்றே பேச்சுத்தமிழில் குறிப்பிடப்படும் ஒரு கிழங்கு வகை...உலகெங்கும் மனிதர்களின் உணவில் மிகவும் முக்கியப் பங்காற்றும் இந்தக் கிழங்கு உடற்நலனுக்கு மிக உகந்ததாகப் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது...சிவப்பு நிறத்தில் முள்ளங்கியைப்போல் இருப்பதால் செம்முள்ளங்கி எனப்படுகிறது...மஞ்சள் முள்ளங்கி/செம்மங்கி என்றும் இதனைக் குறிப்பிடுவர்...இந்தியாவில் பொரியல், வறுவல், ஊறுகாய், இனிப்பு உணவுகள் செய்யவும், குழம்பு,பிரியாணி போன்ற உணவுகளில் சேர்க்கவும் பெரிதும் பயன்படுகிறது.

உடற்நலம் தரும் குணங்கள் தொகு

  • செம்முள்ளங்கி பாண்டு, கபரோகம், நீரடைப்பு, மார்புவலி, மலபந்தம், கல்லடைப்பு ஆகியப்பிணிகளை நீக்கி, அதிக தாது பலத்தைக் கொடுக்கவல்ல கிழங்கு வகையாகும்...
  • செம்முள்ளங்கி மற்ற எல்லாக் காய்கறிகளையும் போலவே பயன்படுத்தப்படக்கூடியது...இதனை அடிக்கடி உண்ணுதலினால் உடம்பில் நல்ல இரத்தம் உண்டாகிப் பரவும்...இருதயம், மூளை, குண்டிக்காய் ஆகிய உடலுள்ளுறுப்புகளுக்குப் பலத்தைக் கொடுத்து, தாதுவளத்தையும் சிறப்பாக வளர்த்தெடுக்கும்...இந்தக் கிழங்கை இருமல், மார்புவலி, பாண்டு, நீர்க்கட்டு, கல்லடைப்பு, மலச்சிக்கல் ஆகிய நோய்கள் உள்ளவர்கள், தினமும் ஏதாவதொரு வகையில் சாப்பிட்டால் நன்மையுண்டாகும்...செம்முள்ளங்கியை அரைத்துக் கொஞ்சம் நெருப்பனலில் வெதுப்பித் தாளக்கூடிய சூட்டில் ஆறாத இரணங்களின்மீது வைத்துக்கட்டினால் விரைவில் ஆறும்...
  • இக்கிழங்கை நன்றாகக் கழுவி துருவியோ அல்லது துண்டுகளாக்கியோ விருப்பப்பட்டபடி பச்சையாகவே உண்பது ஒரு சாலச் சிறந்த முறையாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்முள்ளங்கி&oldid=1451068" இலிருந்து மீள்விக்கப்பட்டது