சாதாரணமாக எங்கும் கிடைக்கும் இளம் தேங்காயினுள்ளிலிருந்து கிடைக்கும் இளநீரானது உடற்நலத்திற்கு மிகச்சிறந்தது...இருப்பினும் இந்த இளநீர்க்காய்களில் பலவிதமான இனங்களுண்டு...அவை உருவம், நிறம், அளவு, குணம் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன...அவ்வகையில் சோரியிள நீர் எனப்படும் இளநீரானது, பொதுவான இளநீருக்குரிய நற்பலன்களை நல்குவதோடு, சிறப்பாக வீக்கம், வயிற்றிலுள்ள பூச்சிகள், சன்னக் கிருமிகள் போகும்... வனப்பும், தெளிவான பேச்சாற்றலும் உண்டாகும்...இவ்வகை இளநீர்க் காய் இரத்தத்தின் வண்ணம் கொண்டிருக்கும்...சோரி எனில் இரத்தமென்று ஒரு பொருள் உண்டு...