தலா
பொருள்
- (உ) தலா
- தலைக்கு, ஒவ்வொருவருக்கு, ஒன்றுக்கு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- தலா என்பதன் பொருள் தலைக்கு என்பதாம். இது தலையுடைய மனிதரைக் குறிக்கும். தலைக்கு ஆயிரம் ரூபா என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபா என்றாலும் பொருள் ஒன்றே. ஒவ்வொருவர்க்கும் எனச் சொன்னால் தலா வேண்டாம். தலா போட்டால் ஒவ்வொருவர்க்கும் எனல் வேண்டாம்.. (கவிக்கோ ஞானச்செல்வன், மொழிப் பயிற்சி: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 27 பிப் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)