திவ்விய தேசங்கள்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
திவ்விய தேசங்கள், .
பொருள்
தொகு- வைணவர்களின் மிகப் புனிதமான திருக்கோயில்கள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...திருமாலை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைணவர்களுக்கு மிகப் புனிதமான 108 தலங்களை திவ்விய தேசங்கள் என்பார்கள்.. இவற்றில் முதலாவது திருவரங்கம்...இந்த 108 தலங்களில் 106 தலங்கள் மட்டுமே இந்த பூலோகத்தில் உள்ளன...மீதி இரண்டு தலங்களான திருபாற்கடலும், திருவைகுண்டமும் மேலுலகில் உள்ளன என்று சொல்லப்படுகிறது...முசுலீம் மக்களுக்கு மக்காவுக்கும், கிறித்துவர்களுக்கு ஜெருசலேமுக்கும் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்றுவர மட்டற்ற அவா இருப்பதைப்போலவே, தீவிர வைணவர்கள் இந்த 106 தலங்களையும் தங்கள் வாழ்நாளில் தரிசித்துவிட வேண்டுமென்று மிக விரும்புவர்...நாடெங்கும் நூற்றுக்கணக்கில் பெருமாள் கோவில்களிருந்தாலும் இந்த 106 தலங்களே அதி முக்கியமானவைகளாகும்...திவ்விய தேசம் என்னும் தகுதியைப்பெற ஒரு தலம் ஐந்து அம்சங்களைக் கொண்டு விளங்க வேண்டும்...அவை (1) தனிப்பெயரோடு ஓர் அர்ச்சா மூர்த்தி, எ.கா அரங்கநாதன் திருவரங்கம், ஸ்ரீனிவாசர் திருமலை, ஸ்ரீவரதராஜர் காஞ்சீபுரம் (2) தல விருட்சம் (மரம்) (3) புட்கரணி என்னும் தீர்த்தம் (குளம்) (4)தல புராணம் ஆகியவற்றோடு (5) ஆழ்வார்களில் ஒருவரால் அந்த தலத்து இறைவன் மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்க வேண்டும் அதாவது பாசுரங்களால் போற்றப்பட்டிருக்க வேண்டும்...