தமிழ்

தொகு

பொருள்

தொகு
  1. ஒரு பாடத்தின் உட்பிரிவு.
    (எ. கா.) உயிரியல் என்ற பாடத்தின் உட்பிரிவாகத் தாவரவியல், விலங்கியல் போன்ற பிரிவுகளைச் சொல்லலாம்.
    சமயத்துறை, ஆங்கிலத்துறைத்தலைவர் (head of english department).
    வீரராயவர் புரிவதாண்மைத் துறையென லாயிற் றன்றே (கம்பரா. வாலி. 82)
  2. கரையோரத்தில் நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு.
    (எ. கா.) நீர்த்துறை,துறைமுகம்
    தண்புனற் றுருத்தியுந் தாழ்பூந் துறைகளும் (மணி. 1, 65)
  3. இடம்.
    அத்துறை யமலனும் (ஞானா. 48, 2)
  4. நியாயவழி.
    துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான் (கம்பரா. வாலி. 74). (தொல். பொ. 56, உரை.)
  5. உபாயம்.
    துறையறிந்து காரியம் நடத்துகிறான்
  6. கடற்றுறை.
    துறை வளர் நாட்டொடு (சீவக. 1618)
  7. கடல்.
    துறைமுற்றிய துளங்கிருக்கை (மதுரைக். 85)
  8. ஆறு
  9. வண்ணானொலிக்கும் இடம்.
    துறைச்செல்லா ளூரவராடை கொண் டொலிக்குநின் புலைத்தி (கலித். 72, 13)
  10. சபைகூடுமிடம்.
  11. சாஸ்திரம்.
    மற்றைத் துறைகளின் முடிவும் (கம்பரா. வாலி. 132)
  12. அகமும் புறமும் பற்றிய தமிழ்ப் பொருட்கூறு.
    தீந்தமிழின் றுறைவாய் நுழைந்தனையோ (திருக்கோ. 20)
  13. ஒழுங்கு வேதந் துறைசெய்தான் (குமர. பிர. சிதம்ப. செய். 13)
  14. பாவினத்தொன்று. (காரிகை, செய். 6, உரை.)
  15. இசைப்பாட்டு வகை
  16. வரலாறு.
    துறை யெனக் கியாதெனச் சொல்லுசொல்லென்றான் (கம்பரா. மீட்சி. 255)
  17. நீர்த்துறை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. branch, sector, field, department
  2. Ghat, bathing ghat
  3. Place, location, situation, space, position
  4. Way, path, as of virtue or justice
  5. Method, means
  6. Seaport, harbour, roadstead
  7. Sea
  8. River
  9. Place where washermen wash clothes
  10. Frequented place, place of meeting, rendezvous
  11. Branch of knowledge, science;
  12. Subject or theme, in akampuṟam
  13. Proper arrangement; codification
  14. A minor variety of any of the four classes of verse, one of three pāviṉam
  15. A kind of singing
  16. History

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துறை&oldid=1902001" இலிருந்து மீள்விக்கப்பட்டது