தோடா(பெ)

  1. கைவளை
  2. கல்வித்திறமைக்குப் பரிசிலாகப்பெறும் பொற்கங்கணம்
  3. இதைப் பாரடா (சென்னைத் தமிழ் பேச்சு வழக்கு)
தோடா
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. armlet, generally of gold
  2. gold bracelet, as a reward of merit
விளக்கம்
  • சென்னைத் தமிழில் “தோடா” என்பது இதைப்பாரடா /இதப்பாருடா என்பதன் சுருக்கமாக (சுட்டுமொழியாகவும், பரிகாசச் சொல்லாகவும்) பயனபடுத்தப்படுகிறது
பயன்பாடு
  • "எனக்கு எங்க தாத்தா ரெண்டுவயசிலே பாட்டு சொல்லி வைக்க ஆரம்பிச்சார். அவருக்கு சிஷ்யர்களுன்னு எங்கப்பா உட்பட எம்பது தொண்ணூறு பேரு உண்டு. ஒத்தர்கூட வீணாப்போகலை. சிலர் பெரிய வித்வான்களா ஆகி வைரக்கடுக்கனும் தோடாவுமா வந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி போவா. சங்கீதமே வராம போனது நான் மட்டும்தான்". (தாயார் பாதம், ஜெயமோகன்)
  • சட்டென நிமிர்ந்து உட்கார்ந்த வீரமணி, ""தோடா... வந்துட்டாரு... ரவுடி, போக்கிரி, பார்ட்டி ஆளுங்கன்னா நம்ம கையில சொல்லு. ஆனா, பேப்பர்காரங்க மேட்டர் வாணாம்.(யுத்தம் 11, நக்கீரன் கோபால்)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தோடா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கைவளை - கங்கணம் - வளையல் - கடுக்கன் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோடா&oldid=1245554" இலிருந்து மீள்விக்கப்பட்டது