நன்று
ஒலிப்பு
|
---|
பொருள்
நன்று (பெ)
- அங்கீகாரக் குறிப்பு; பாராட்டுக் குறிப்பு
- நல்லது
- சிறப்பு
- பெரிது
- அறம்
- இன்பம்
- நல்வினை
- உபகாரம்
- வாழ்வினாக்கம்
- சுவர்க்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- expression signifying approval, praise
- that which is good, goodness
- excellence
- greatness, largeness
- virtue, merit
- happiness, felicity
- good deed
- benefit
- prosperity
- heaven
விளக்கம்
பயன்பாடு
- ”உனது கட்டுரை மிக நன்று”, என்று ஆசிரியர் பாராட்டினார்
- "நன்று, விவாதத்தைத் தொடங்குவோமா?" (உலக மதங்கள் - ஒரு தத்துவப் பார்வை, வாசுகி பெரியார்தாசன் )
- நன்றே செய்க அதுவும் இன்றே செய்க
(இலக்கியப் பயன்பாடு)
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று (கொன்றை வேந்தன், ஔவையார்)
- நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
- நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
- குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
- இணங்கி இருப்பதுவும் நன்று (மூதுரை, ஔவையார்)
- ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
- நன்று வளர்த்த தமிழ்நாடு!
- செந்தமிழ் நாடெனும் போதிலே (பாரதியார்)
- தீதும் நன்றும் பிறர்தர வாரா
- கற்றலில் கேட்டல் நன்று
- நன்றப்பொருளே வலித்தேன் (சீவக. 1932)
- அங்கிது நன்றிது நன் றெனு மாயை யடங்கிடு மாகாதே (திருவாச. 49, 8)
- நன்றாகு மாக்கம் பெரிதெனினும் (குறள். 328)
- சான்றோர் செய்த நன் றுண்டாயின் (புறநா. 34)
- தக்கார்க்கு நன்றாற்றார் (நாலடி. 327)
- நன்றாங்கா னல்லவாக் காண்ப வர் (குறள். 379)
- வாள் வாய் நன்றாயினு மஃதெறியாது விடாதே காண் (கலித். 149)
- நட்டார் குறை முடியார் நன்றாற்றார் (குறள். 908).
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:சிறப்பு - பாராட்டு - பிரமாதம் - அருமை - அபாரம்
பொருள்
- பெரிது
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
- "நன்று பெரிதாகும்" - தொல்காப்பியம் 2-8-46
(இலக்கியப் பயன்பாடு)
- நன்றும் அரிது உற்றனையால் பெரும (அகயானூறு 10)