ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிராகரணம், .

  1. மறுப்பு
  2. புறக்கணிப்பு, அலட்சியம், உபேட்சை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. refutation, confutation, repudiation
  2. disregard
விளக்கம்
பயன்பாடு
  • 17-ஆம் நூற்றாண்டில் கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வு சமய எதிர்ப்புகள். குறிப்பாக, சைவம்-கிறிஸ்தவம் இரண்டு சமயங்களுக்கிடையில் நிகழ்த்தப்பட்ட கருத்தாடல்கள். ஒரு சமயக் கருத்தை எதிர்த்து இன்னொரு சமயத்தார் வாதிடுகிற முறையில் அமைவன இக்கண்டன நூல்கள். மறுப்பு, திக்காகரம், நிந்தனை, அடம், தூஷ்ணம், அசப்பியச்சொல், கண்டனம், நிராகரணம் இப்படி ஒரே இலக்கிய மாதிரிக்கு வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தினர். (காணாமல் போனது ஏன்...?, தமிழ்மணி, 15 மே 2011)
  • 17-ஆம் நூற்றாண்டில் இராபர் டி நொபிலி என்பவர் கிறிஸ்தவ மதத்தை ஏளனம் செய்தவர்களைக் கண்டித்து "தூஷ்ண திக்காகரம்' எனும் நூலைச் செய்தார். இதை எதிர்த்து துறைமங்கலம் சிவப்பிரகாசர், "ஏசுமதநிராகரணம்' எனும் நூலைச் செய்தார். இவ்விரண்டு நூலைத் தொடர்ந்து, கிறிஸ்தவம் - சைவம் ஆகிய இரு சமயத்துக்குமான சாடல்கள் தொடர்ந்தன. சிவப்பிரகாசரின் "ஏசுமதநிராகரணம்" இன்று காணாமல் போய்விட்டது. அப்போதைய ஆதிக்க சமயமாக, கிறித்தவம் இருந்ததாலோ என்னவோ அந்நூல் காணாமல் போய்விட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது. (காணாமல் போனது ஏன்...?, தமிழ்மணி, 15 மே 2011)
(இலக்கியப் பயன்பாடு)
  • ஈசுவர நிராகரணம் பண்ணுமவன்(தக்கயாகப். 183, உரை.).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
நிராகரிப்பு - மறுப்பு - உபேட்சை - ஆகரணம் - புறக்கணிப்பு - அலட்சியம் - #


( மொழிகள் )

சான்றுகள் ---நிராகரணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிராகரணம்&oldid=1065905" இலிருந்து மீள்விக்கப்பட்டது