பொருள்

நைஷ்டிகம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • நைஷ்டிகப்பிரமசாரி - one who observes the vows of celibacy.
  • ஒருமுறை பிரம்மலோகத்தில், நாரதர் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு கேள்வி எழுந்தது. மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதே அந்தக் கேள்வி! "சந்தேகமென்ன, நீதான் நாரதா" என்று பிரம்மா சொல்வார் என, நாரதர் நினைத்தார். ஆனால், பிரம்மாவின் பதில் நாரதருக்கு அதிர்ச்சியைத் தந்தது. "பூவுலகில் மானிடனாக அவதரித்து, கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் லீலைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன்தான் நைஷ்டிக பிரம்மசாரி!" என்றார் ஸ்ரீபிரம்மா. "சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி?'" என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர்.
  • துர்வாச மகரிஷி நாரதரை வரவேற்று, வந்த விஷயம் என்ன என்று கேட்டார். பிரம்ம லோகத்தில் நடந்த சர்ச்சையை விளக்கி, மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதை தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார் நாரதர். "சந்தேகமின்றி நைஷ்டிக பிரம்மசாரி அந்த ஸ்ரீகிருஷ்ணனேதான்" என்றார் துர்வாசர். அதற்கு விளக்கம் கேட்டார் நாரதர். "நாரதா, பெண்களே இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, அல்லது பெண்கள் தன்னை அணுகுவதைத் தவிர்த்துக் கொண்டு, வாழ்பவன் நைஷ்டிக பிரம்மசாரி அல்ல. பெண்கள் மத்தியிலே வாழ்ந்துகொண்டு அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல் இருக்கிறவனே உண்மையில் வைராக்கிய பிரம்மசாரி. பதினாயிரம் கோபியருடன் ஆடிப்பாடி ராஸலீலை புரியும் ஸ்ரீகண்ணன், அவர்கள் ஒருவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல், பற்றற்ற நிலையில் பரப்பிரம்மமாகவே இருக்கிறான்.
  • அவன் அன்பும் அருளும் அனைவருக்குமே சொந்தம். பிருந்தாவனத்துப் பசுக்களும், கோபிகையரும் அவன் கண்களுக்கு ஒன்றுதான். அவன் அன்புக்கும் அருளுக்கும் ஆண் - பெண் என்ற பேதமில்லை. அவனை மற்றவர்கள் பிள்ளையாய், தந்தையாய், தாயாய், நண்பனாய், காதலனாய், குருவாய், தெய்வமாய் பாவிப்பது அவரவர்கள் மகிழ்ச்சிக்காகவே! அவன் தண்ணீரில் உள்ள தாமரை இலை. அது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீர் அதில் ஒட்டுவதில்லை. அதுபோலவே, அவன் பற்றற்ற பரம்பொருள். பதினாயிரம் பெண்கள் நடுவே நெருக்கமாக வாழ்ந்து, அவர்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளான போதும், மனதாலும் வாக்காலும், காயத்தாலும் (உடல்) இச்சையின்றி வாழும் அவனே நைஷ்டிக பிரம்மசாரி" என்றார் துர்வாசர். (கண்ணனே பிரம்மசாரி, சக்திவிகடன், 15-மே -2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நைஷ்டிகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நைஷ்டிகம்&oldid=1881063" இலிருந்து மீள்விக்கப்பட்டது