பசலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பசலை, .
- காமநோய்; துணையின் பிரிவினால் உடல் வெளிறுதல்.
- பொன்னிறம். (பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ - புறநானூறு. 155). [1]
- மனச்சலனம் (நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின்வீழ - சீவக சிந்தாமணி. 3080) [2]
விளக்கம்
- தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்
- பசலைக்கீரையை சுருக்கமாக பசலை என்றும் கூறும் வழக்கம், தமிழகத்தில் உள்ளது.
மேற்கோள்
தொகு- (இலக்கியப் பயன்பாடு)
- நயந்தவர்க்கு நல்காமை தேர்ந்தேன் பசந்த என்
- பண்பியார்க்கு உரைக்கோ பிற.(திருக்குறள் 1181- பசப்புறு பருவரல்)
- நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
- சிறுமை உறுபவோ செய்பு அறியலரே (நற்றிணை)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பசலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து