பட்டவர்த்தனம்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பட்டவர்த்தனம், பெயர்ச்சொல்.
  1. வஞ்சனையின்றி வெளிப்படையாகப் பேசும் பேச்சு
  2. மறைவின்றி வெளிப்படையாய்ப் பேசுபவ-ன்-ள். அவன் பட்டவர்த்தனம்
  3. பட்டத்து யானை; அரசயானை
  4. குதிரைச் சாதி
  5. பிராமணருள் ஒருசாரார் இடும் நெற்றிக்குறி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. plain-spoken words
  2. plain-spoken or out-spoken person
  3. royal elephant
  4. a kind of horse
  5. a large mark worn on the forehead by certain classes of Brahmins
விளக்கம்
பயன்பாடு
  • ஆண்டாள் எழுதியது போல் வெறி பிடித்த காதல் பாடல்களை எந்த ஆணாலும் எழுதிவிட முடியாது. ஆண்டாளுக்கு முன் சங்க இலக்கியத்தில் சில உக்கிரமான பாடல்களே உண்டு. அதற்குப்பிறகு பெண்கள் உணர்வுகளை தமிழ் இலக்கியத்தில் பட்டும் படாமலும் வெளிப்படுத்துகிறார்களே தவிர பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தத் தடைகள் இருந்திருக்கலாம். (பெண் எழுத்து, சக்திவிகடன், )
(இலக்கியப் பயன்பாடு)
  • பட்டவர்த்தனமாம் பண்புபெற்ற வெங்களிறு(பெரியபுராணம். எறிபத். 11)
  • மரீசிகோரம் பட்டவர்த்தனங்கள் பாரே(திருவாலவா. 28, 69).
(இலக்கணப் பயன்பாடு)
பட்டவருத்தனம் - பட்டம் - வர்த்தனம் - வெளிப்படை - அப்பட்டம்


( மொழிகள் )

சான்றுகள் ---பட்டவர்த்தனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டவர்த்தனம்&oldid=1969294" இலிருந்து மீள்விக்கப்பட்டது