பயனர் பேச்சு:Info-farmer/2008

வாருங்கள், Info-farmer/2008!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 14:10, 18 அக்டோபர் 2007 (UTC)Reply

குறிப்புகள்

தொகு

தகவலுழவன், உங்கள் பங்களிப்பைக் கண்டு மகிழ்ச்சி. சில குறிப்புகள்.. பக்கத் தலைப்புகள், நீங்கள் சேர்க்கும் சொற்களில் எல்லா ஆங்கில எழுத்துக்களையும் சிறிய எழுத்துக்களிலேயே எழுதவும். (adj)போன்ற குறிப்புகள் தேவை இல்லை. அவற்றை பக்கத்தின் உள்ளடக்கத்தில் குறிப்பிட்டால் போதுமானது.Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தில் பொருத்தமான படிவத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம்--ரவி 16:43, 25 அக்டோபர் 2007 (UTC)Reply

தகவலுழவன், தொடர்புடைய சொற்களாக நீங்கள் சேர்க்கும் பாங்கு நன்று. சில சொற்களுக்கான பொருளை தமிழில் விளக்காமல் வெறும் உச்சரிப்பு உதவி மற்றும் பிற விவரங்கள் தருவதைத் தவிர்க்கலாமே? ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழில் பொருள் விளக்கம் தருவதை முதன்மை நோக்கமாக கொள்ளலாமே? நன்றி--ரவி 16:46, 27 நவம்பர் 2007 (UTC)Reply

autobus, asbestos போன்ற சொற்களை விளக்கம் ஏதும் இன்றி சேர்த்திருக்கிறீர்களே? இது போல் வெற்றுப் பக்கங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாமே? பிறகு, புதிய பக்கம் உருவாக்கும்போது, தொகுப்புப் பெட்டிக்கு கீழே இருக்கும் "சுருக்கம்" என்னும் பகுதியில் அச்சொல்லின் பொருளைத் தாருங்கள். இதனால் அண்மைய மாற்றங்கள் பகுதியில் இருந்து உங்கள் தொகுப்புகளைக் கவனிப்பவர்களுக்கு உதவும். நன்றி--ரவி 19:48, 17 டிசம்பர் 2007 (UTC)

தங்களின் வழிக் காட்டுதலுக்கு நன்றி.சொந்தக் கணினி என்னிடத்தில் இல்லை.முடிந்தவரை சிறு பிழைகளைத்தவிர்கிறேன்.இனி, மேலும் கவனமுடன் செயல்படுவேன்.[#இது ஒரு சிறு தொகுப்பு, #இப் பக்கத்தை கவனிக்கவும்] போன்றவற்றை எதற்கு பயன் படுத்துவது?தகவலுழவன் 06:42, 18 டிசம்பர் 2007 (UTC)

தகவலுழவன், நீங்கள் நாள்தோறும் தவறாமல் செய்யும் தொகுப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது. விக்சனரிக்கு மக்களிடம் இருந்து உற்சாகமான பங்களிப்புகள் போதுமான அளவு இல்லாததால் சோர்ந்து போயிருந்தேன். உங்கள்ள் வரவை ஒட்டி நானும் நாளும் சில சொற்ற்கள் சேர்க்க முயல்வேன்.

பொதுவாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு தொகுப்பையும் இன்னொரு பயனர் மேற்பார்வையிடக்கூடும். பக்கங்களில் யாரும் தேவையற்ற, தவறான மாற்றங்களைச் செய்யாமல் பார்த்துக் கொள்வதற்காகவும் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என அறிவதற்காகவும் இப்படி மேற்பார்வையிடுகிறார்கள். ஆனால், எழுத்துப்பிழை திருத்தம், alignment, formatting போன்றவை சிறு திருத்தங்களை அவர்கள் பார்க்கத் தேவை இல்லை தானே? எனவே, நீங்கள் செய்யும் தொகுப்புகளில் தகுந்தவற்றை சிறு தொகுப்பு எனக் குறித்தால், அந்த மாற்றங்களை skip செய்து பிற மாற்றங்களைக் கவனிப்பதற்கு நேரம் ஒதுக்க பயனர்களுக்கு உதவும். அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் சிறு தொகுப்புகளை மறைத்து விட்டுப் பார்க்கும் வசதி உண்டு. நீங்கள் தொகுக்கும் பக்கங்களில் சிலவற்றை மிக முக்கியமாகக் கருதினால், அதன் மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து விரும்பினால், -இப்பக்கத்தைக் கவனிக்கவும் - என்று குறியிடலாம். இப்படி கவனிக்கப்படும் பக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தடித்த எழுத்துக்களில் காட்டப்படும். தளத்தின் மேலே உள்ள இணைப்புகளில் -என்னுடைய கவனிப்புப் பட்டியல் (watchlist) - என்று ஒரு இணைப்பு இருக்கிறதல்லவா? அங்கும் இப்பக்கங்களின் மாற்றங்கள் பட்டியலிடப்படும். நீங்கள் தொகுக்கும் கட்டுரைகள் தவிர்த்து எந்தப் பக்கத்தையும் இந்தக் கவனிப்புப் பட்டியலில் சேர்க்கலாம்--ரவி 00:58, 20 டிசம்பர் 2007 (UTC)

என் நன்றிகள் பல.அனைத்தினையும் கவனத்தில் கொள்வேன்.இனி அடிப்படை ஆங்கிலத்தினைக் கவனிக்கிறேன்.தகவலுழவன்

Bang, Biology போன்று முதல் எழுத்துக்களை capital எழுத்துக்களாகக் கொண்டு பக்கங்களை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜெர்மன் போன்ற பிற மொழிகளில் இவ்வாறு முதல் எழுத்து capitalஆக வரும் சொற்களுக்கு வேறு பொருள் உண்டு. எனவே பொதுவாக ஆங்கிலச் சொற்களுக்கு அவசியமின்றி capital எழுத்துக்களைக் கொண்டு பக்கங்களை உருவாக்காமல் இருப்பதை அனைத்து மொழி விக்சனரிகளிலும் ஒரு நடைமுறையாகக் கொண்டிருக்கிறோம்--ரவி 14:19, 7 பெப்ரவரி 2008 (UTC)

Bang,Biology பற்றி மறு விளக்கம்(நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.)

தொகு

வாங்க நண்பரே! நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

1.[இப்பக்கத்தினைக் காணவும்]

2.அங்கு கீழ்கண்ட அறிவிப்பு இருந்ததால், வேறு வழியின்றி (Bang,Biology பற்றி) பெரிய எழுத்தினைக் கருத்தில் கொள்ளவில்லை.

This page is a list of words that come from a specific source and should not be changed.
Please do not add new items or make casual updates to it, unless you are correcting it to match its original source.

3.மேலும், அங்கு பல வார்த்தைகள் பெரிய எழுத்திலேயே உள்ளது. எ.கா.December , Dominion, Embassy , Empire,.... இவற்றினை சிறிய எழுத்துக்கு மாற்றினால், பல மொழியாக்கலுக்கு உள்ள இணைப்புத் தடைபடாதா?

4.செர்மனிப் பற்றி மிகுந்த மதிப்பான எண்ணம் எனக்குண்டு. உலகத்தின் போக்கினை பலமுறை மாற்றியவர்கள். எனினும், ஒரு மொழிக்கு ஏற்ப நாம் மாறுவதே சிறந்தது. ஒவ்வொருவருக்கும் தகுந்த படி மொழியை மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.

5.நீங்கள் எனக்கு இட்டப் பணியை தவறாமல் பின்பற்றுவேன்.

6. இன்று 23 மொழிகள் தெரிந்த தேவநேய பாவாணர்(1902) பிறந்த தினம் . அவரின் அகராதிப் பணியைத் தமிழுழகம் மறக்குமா? அல்லது மறுக்குமா? அவரின் அழியும் நிலையிலுள்ள அகராதியொன்றினைக் கண்டேன். கண் கலங்கினேன். அதனை மென்நூலாக்(PDF)குவேன்.இப்பொழுது நிலைமை சரியில்லை.

வணக்கம்தகவலுழவன் 15:53, 7 பெப்ரவரி 2008 (UTC)
வருவேன் என்று எதிர்ப்பார்த்தீர்களா? ரொம்பக் குடையுறேனோ :) சிரமத்துக்குப் பொறுக்கவும். நான் இட்ட பணியை செய்கிறேன் என்றெல்லாம் தயவு செய்து நினைக்க வேண்டாம். விக்சனரி ஒரு தன்னார்வ பங்களிப்பு. நான் உங்களுக்கு முதல் இங்கு வந்தேன் என்பது தவிர நமக்குள் ஒரு வேறுபாடும் இல்லை. அண்மைக்காலத்தில் விக்சனரியை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் உங்களுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். தற்போது, தொகுப்புச் சுருக்கங்களை நீங்கள் தரத்தொடங்கி இருப்பதால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தே உங்கள் தொகுப்புகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. மிகவும் நன்றி.

மீண்டும் சில குறிப்புகள்:

அதிகத் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும் என்று சொல்லி ஆங்கில விக்கிப்பீடியா தொடுப்பு தர அவசியம் இல்லை. வழமையாக நாம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பிற மொழி விக்சனரிகளுக்குமே தொடுப்பு தந்து வருகிறோம். எடுத்துக்காட்டுக்கு, cashew என்ற பக்கத்தில் இருந்து ஆங்கில விக்சனரி சொல் பக்கத்துக்குத் தொடுப்பு தர [[:en:cashew]] என்ற சரத்தைப் பக்கத்தின் இறுதியில் சேர்த்தீர்கள் என்றால், இடது பக்கப்பட்டையில் தானாக அந்தத் தொடுப்பு சேர்ந்து விடும். விக்சனரிகளுக்கு இடையே பல தானியங்கிகள் இயங்குகின்றன. அவை இந்தத் தொடுப்பைப் பிடித்து பிற மொழி விக்சனரிகளுக்கான தொடுப்புகளையும் சேர்த்து விடும். எடுத்துக்காட்டுக்கு, reserve பக்கத்தின் கடைசியில் உள்ள தொடுப்புகளைப் பாருங்கள். இதே போல், தமிழ் விக்கிப்பிடீயாவில் உள்ள பக்கங்களுக்கான தொடுப்புகளைத் தருவது என்பதைப் பார்க்க சித்திரை பக்கத்தைப் பாருங்கள்.

சொற்தோற்றம் குறித்த தகவல்கள் போன்ற தொடுப்புகளுக்குத் தொடுப்புத் தொடராக - இங்கே சொடுக்கவும் - என்று தந்துள்ளீர்கள். அப்படித் தராமல், அந்தத் தளத்தின் பெயரையோ விவரிப்பையோ தாருங்கள். ஏனெனில் இங்கே சொடுக்கவும் என்று இருந்தால் அது எங்கே போகும் என்று ஊகிக்கத் தாமதமாகும். எடுத்துக்காட்டுக்கு [http://etymology.com etymology தள விளக்கம்] என்று தரலாம்.

இனி bang, biology குறித்த விளக்கங்கள்:

1. நீங்கள் குறிப்பிட்ட பக்கத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யாமல் விட்டு விட்டோம் :( அதில் உள்ள சொற்களைத் தான் மாற்றக்கூடாதே தவிர, தேவையான இடத்தில் சொற்களைச் சிறிய எழுத்தில் மாற்றி எழுதித் தொடுப்புகளை சரி செய்யலாம். நீங்கள் பின்பற்றி வரும் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் உள்ள சிகப்பு வண்ணத் தொடுப்பு இருந்தாலும், ஆங்கிலச் சொற்களைப் பொருத்த வரை அனைத்து எழுத்துகளையும் சிறிய எழுத்துக்களிலேயே கேட்டுக் கொள்கிறேன்.

3. //மேலும், அங்கு பல வார்த்தைகள் பெரிய எழுத்திலேயே உள்ளது. எ.கா.December , Dominion, Embassy , Empire,.... இவற்றினை சிறிய எழுத்துக்கு மாற்றினால், பல மொழியாக்கலுக்கு உள்ள இணைப்புத் தடைபடாதா?//

என்ன தடைபடும் என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை. இருந்தாலும், ஆங்கிலச் சொற்களாக இருக்கும் வரை தயங்காமல் அந்தச் சொற்களைச் சிறிய எழுத்துகளில் மாற்றி எழுதித் தொடுப்புகளைச் சீராக்கி பிறகு பக்கங்களை உருவாக்குங்கள்.

4. செர்மனி குறித்த உங்கள் கருத்தும் எனக்குப் புரியவில்லை. ஆங்கில taste என்ற சொல்லுக்கும் ஜெர்மனிய Taste என்ற சொல்லுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஜெர்மன் மொழியிலேயே சில சமயம் பெரிய எழுத்தில் தொடங்கினால் ஒரு பொருளாகவும் சிறிய எழுத்தில் தொடங்கினால் ஒரு பொருளாகவும் இருப்பதுண்டு. அதனாலேயே ஆங்கிலச் சொற்களைப் பெரிய எழுத்துக்களில் தொடங்கி எழுதுவதைத் தவிர்க்கிறோம்.

6. பாவாணரின் நூல் குறித்த உங்கள் செய்தி வருத்தம் அளிக்கிறது. உங்களிடம் இருப்பது தான் எஞ்சியிருக்கும் ஒரே பிரதியா? இந்த நூலின் நல்ல நிலையில் உள்ள வேறு பதிப்புகள் வேறு எங்கும் கிடைக்குமா? உங்களிடம் இருப்பது தான் ஒரே பிரதி என்றால் மிகவும் கவலைக்கிடமான விசயம். இவற்றை எப்படி மென்நூலாக்குவது என்று பார்க்க வேண்டும். தயவு செய்து முழு நூலையும் நீங்களே தட்டச்சு செய்ய இறங்கி விடாதீர்கள். அது உங்களைப் போன்ற உணர்வுள்ளவர்களின் பொன்னான நேரத்தை வீணாக்கும். அதை scan செய்து போடலாமா, எப்படி வேறு வகையில் தானியக்கமாகவோ வேறு தட்டச்சு ஆர்வலர்களைக் கொண்டோ செய்வது என்று பார்க்க வேண்டும். இது ஒரு நூல் குறித்த பிரச்சினை அல்ல. பல நூல்களை இது போல் புதுப்பிக்க வேண்டி இருக்கிறது. ஈழத்து நூல்களை இணையத்தில் ஏற்றும் திட்டம் http://noolaham.net தளத்தில் இயங்கி வருகிறது. அது போல் தமிழக நூல்களுக்கான ஒரு திட்டத்தைச் செயற்படுத்தும் கனவு நண்பர்களுக்கு உண்டு. ஆனால், இப்படி எண்ணுபவர்கள் எல்லாம் தமிழகத்துக்கு வெளியில் இருப்பதால் பல விசயங்களைச் செய்ய இயலவில்லை. தாங்கள் தமிழகத்தில் இருந்தால் இது போன்ற திட்டங்களுக்கு எந்த அளவுக்கு உதவ இயலும் என்று சொல்லுங்கள்.

நன்றி. --ரவி 23:09, 14 பெப்ரவரி 2008 (UTC).

நண்பர் இரவிக்கு..

தொகு
  • வாழ்ந்த தமிழை, வாழவைப்போம்.
  • தங்களின் வருகை என்றுமே எனக்கு ஆனந்தம் தான். 'குடையுறேனோ' , என்றெல்லாம் நினைக்காதீர். தங்களின் 'குடை', எனக்கு அருமையான நிழல் மற்றும் வளர்ச்சியைத் தான் தருகிறது.
  • இனி சிறிய எழுத்துப் பிழைகள், என்னால் வராது.
  • செர்மனி' மற்றும் 'மொழியாக்கலுக்கு உள்ள இணைப்புத் தடை..' குறித்த, எனது தவறானக் கருத்துக்களை மாற்றிக் கொள்கிறேன்.
  • சென்னை பாவாணர் நூலகத்தில், பலநபர்களின், பல அரிய நூல்களைக் கண்டேன். பாவாணரின் பல அரிய நூல்கள் அழியும் தருவாயிலுள்ளது. என்னிடம் பாவாணரின் ஒரு அகராதியே, நகலாக உள்ளது. என்னுடைய வருமானம் நாளொன்றுக்கு, ஏறத்தாழ ரூபாய் 50-60 தான். எனவே, இது பற்றி பின்னர் விரிவாகத் தகவல் அனுப்புகிறேன்.
  1. தமிழ் வார்த்தைகளை, அகர வரிசைப்பட்டியலிட ஏதேனும் மென்பொருளுள்ளதா?
  2. தமிழ் மென்நூலை, சாதரணக் கோப்பாகமாற்ற முடியுமா?
  3. விக்சனரிகளுக்கு இடையே இயங்கும் தானியங்கிகள் (en:cashew போன்ற ) பற்றியத் தகவல்களை தந்தால், என் பணிக்கு உதவியாக இருக்கும்.இது {விக்கிபீடியா} போல, ஆங்கில விக்கிபீடியாவிற்குச் செல்ல, என்ன செய்ய வேண்டும்.
  4. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், உங்களின் விக்சனரி அனுபவ வழிகளை என்னுடன் பகிரருங்கள். அது என்னை மேம்படுத்தும் என்று நம்புகிறேன்.
  • விக்சனரியில் tamiz (logo) என்பது என்னை நிரம்ப சங்கடப்படுத்துகிறது. அதை மாற்ற வழியே இல்லையா? நுழைவாயிலே, பிழைகளோடு இப்படியிருக்கலாமா?
நன்றிகள் பல,வணக்கம். தகவலுழவன் 13:27, 15 பெப்ரவரி 2008 (UTC)
தகவலுழவன், இயன்றால் ravidreams_03 at yahoo dot com என்ற முகவரிக்கு ஒரு மடல் போடுங்களேன். சில விசயங்களை அங்கு பேசுவது பொருத்தமாக இருக்கும்.
தமிழ்ச் சொற்களை அகரவரிசைப்படுத்த மென்பொருள் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும். நல்ல யோசனை.
தமிழ்மென்னூலை சாதாரணக்கோப்பாக மாற்றுவது என்றால்? pdf கோப்பை txt கோப்பாக மாற்ற வேண்டுமா? ஏதும் மென்பொருள்கள் இருக்கும். ஆனால், தமிழ் எழுத்துக்கள் சில சமயம் சிக்கல் அளிக்கக்கூடும். முயன்று பார்த்து விட்டுச் சொல்கிறேன்.
பொதுவாக, பக்கத்தின் உள்ளடக்கப் பகுதியில் இருந்து ஒரே மொழி விக்கித் திட்டங்களுக்குள் தொடுப்பு தருவதும், பக்கப்பட்டையில் இருந்து அதே திட்டத்துக்கான பிற மொழிகளுக்கும் தொடுப்பு கொடுப்பதும் தான் வழமை. எனவே, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தொடுப்பு தருவது போல் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு தொடுப்பு தருவதை அவ்வளவாக பரிந்துரைக்க மாட்டேன். ஆங்கில விக்கிப்பீடியா பிடிக்காது என்றில்லை :) ஆனால், தமிழ்த் திட்டங்களை நாடி வருபவர்களுக்கு இயன்ற அளவு தமிழ்த் திட்டங்களுக்கான தொடுப்புகளைத் தருவதும், அவ்வாறு தொடுப்புகள் இல்லாத போது அவற்றை உருவாக்கவும் முயல்வோம். ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு தொடுப்பு கொடுக்கத் தொடங்கினால் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை தொடங்கவோ மேம்படுத்தவோ நமக்கு தூண்டுதல் இல்லாமல் போய்விடும்.
வார்ப்புரு:விக்கிபீடியா பக்கம் போய் அந்தப் பக்கம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தீர்களானால், அது போன்ற வார்ப்புருக்களை எப்படி உருவாக்குவது என்பது உங்களுக்குப் புலப்படும்.
tamiz என்று எழுதி இருப்பது காரணமாகத் தான். அது ஆங்கில spelling இல்லை. ஒலிப்பியல் ரீதியில் எழுதப்பட்டது. இது குறித்து ஏற்கனவே எங்கோ விளக்கி இருந்தது. தொடுப்பு தேடித் தருகிறேன்.
10,000 சொற்கள் இலக்கு குறித்து மகிழ்ச்சி. ஆனால், அது நீங்கள் எதிர்ப்பார்ப்பதற்குள் நிறைவேறப் போகிறது ! தானியக்கமாய் ஒரு இலட்சம் சொற்களைச் சேர்க்கும் திட்டம் நிறைவுறும் தருவாயில் இருக்கிறது. மேல் விவரங்கள் விரைவில் கிடைக்கும். அதற்கு அடுத்து இணையத்தில் ஏற்கனவே இருக்கும் பல தமிழ் அகரமுதலிகளையும் தானியக்கமாய் ஏற்றும் திட்டம் இருக்கிறது. --ரவி 11:31, 16 பெப்ரவரி 2008 (UTC)

இரவிக்கு..

  • தமிழில் சிறந்தக் கட்டுரைகள் எழுத, எனக்கு பேராவல். இருந்தாலும், என்னிடம் சில இயலாமைகள். நம் விக்சனரிப் பக்கத்தை, ஒரு குறிப்பு வழிகாட்டியாகவே மாற்ற வேண்டும் என்பது என் அவா. தமிழ் விக்கிபீடியாவில், கனிகள் குறித்தச் சிறப்பானக் கட்டுரைகள் இல்லை என்பதே உண்மை. விரைவில் அதற்கான நடவடிக்கையில் இறங்குவேன். இப்பொழுது, தமிழ் நுண்ணகராதி என்ற தலைப்பில் கொஞ்சம் தகவல்களைச் சேகரிக்கத் துவங்கியுள்ளேன். இதன் மூலம், நம் தமிழின் சொல் ஆழத்தினை, மேலும் பலருக்கு உணர வைக்க முடியும் என நம்புகிறேன்.
  • வார்ப்புரு:விக்கிபீடியா பக்கம் போய் பார்த்தேன்.எனக்கு ..??? ஏனென்றால், எனது கணினியறிவு அடிப்படையானதல்ல. வெறும் அனுபவ ரீதியானதே(5-6 மாதங்கள் தான்). என்னிடம் கணினியுமில்லை.இப்போதைக்கு ஆர்வம் மட்டும் தான். 'கற்றலின் கேட்டல் நன்று' என்ற அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறேன் .('ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' -பாரதி) என்பதே என் நோக்கம். அடிப்படைக்கல்விக்கான ஆதாரங்களை உருவாக்குவதே என் லட்சியம். என் உழைப்பு, அடிமைக்கல்விக்கல்ல. சிறந்ததொரு அடிப்படைக்கல்வியகராதியை, குறுந்தகட்டில் கொண்டு வர என்னுள் ஆசை, உறுதி. இங்கு அதற்காகவே பயிற்சி மேற்கொள்கிறேன்.
  • pdf கோப்பை txt கோப்பாக மாற்றவும், தமிழ்ச் சொற்களை அகரவரிசைப்படுத்தவும் மென்பொருள் உதவி,உங்களின் மூலம் எனக்குக் கிடைக்குமென நம்புகிறேன். அவசரமில்லை. பல மேம்பட்ட தமிழ் பணிகளுக்கு, அதுவே அடிப்படையாக அமையும். பலநூறு நூல்களைக் காப்பாற்ற முடியும். மறக்காதீர்கள்.
  • தானியங்கித் திட்டத்தின் துவக்கம் மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக உழைப்பவர்களுக்கு, என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
  • என் தட்டெழுத்து வேகம், சில காரணங்களால் ஆமை வேகம். எனவே, தாமதமாகப் பதில் அடித்ததற்கு மன்னிக்கவும்.
  • கூடிய விரைவில், சில நல்ல பணிகளோடு உங்கள் யாகூக்கு மடலிடுகிறேன். தகவலுழவன் 05:36, 19 பெப்ரவரி 2008 (UTC)

நண்பர்கள் சிலர் நீங்கள் கேட்டது போல் அகரவரிசைப்படுத்தல் மென்பொருள் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது வெளிவந்தவுடன் தெரிவிக்கிறேன். கூடிய சீக்கிரம் எதிர்ப்பார்க்கலாம். உங்கள் தமிழ் நுண்ணகராதி முயற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் நிறையவும் வேகமாகவும் தமிழில் எழுத விரும்பினால் அதற்கு தமிழ்99 தட்டச்சு முறை மிகச் சிறந்தது. நான் இதைத் தான் பயன்படுத்துகிறேன். இது குறித்த விவரங்களை http://tamil99.org தளத்தில் அறியலாம். வார்ப்புரு உருவாக்கம் குறித்த கையேட்டை உருவாக்கத் தர முயல்கிறேன். --ரவி 11:15, 19 பெப்ரவரி 2008 (UTC)

மின்னூலாக்கம்

தொகு

ரவி, சிறிய அளவிலாவது மின்னகலாக்கல் வேலைகள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்கும் வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். நாம் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கனவு காண்பது :) மார்க்சிய ஆர்வலர்கள் சிலரைத் தூண்டி மின்னகலாக்கத்தை ஊக்குவித்தேன். மூன்றே நூல்களுடன் நின்று விட்டார்கள். (tamilbookshare.blogspot.com)

தகவலுழவன், விக்சனரியில் உங்களது இடையறாத பணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ஒரு கணினியும் மின்வருடியும் (ஸ்கானர்) இருக்கும் எவரும் மின்னகலாக்கம் செய்யலாம். சாத்தியமெனின் எவ்வாறு செய்வதென்ற தகவல்களுக்கு எனக்கு மின்னஞ்சலிடுக. kopinath 'AT' gmail 'DOT' com. நன்றி. கோபி 05:23, 18 பெப்ரவரி 2008 (UTC)

இரவிக்கு

தொகு
வாழந்த தமிழை, வாழ வைப்போம்.

1.தொடர்புடைய சொற்கள் பகுதியில் நேரடியாகத் தொடர்புடைய சொற்களைத் தர முயலுகிறேன்.இந்நூல் அத்தகையப்பணியைச் சிறப்பாக செய்ய உதவும். எனினும், இப்போதைக்கு, அப்பணியை சில சொந்த இயலாமைகளால் ஒத்தி வைத்துள்ளேன். மருத்துவத்தில் போன்ற சில சொற்களில் ஏற்கனவே ஓரளவு அதனைச் செய்துள்ளேன்.நம் விக்சனரிக்கு வருபவர்கள், பிற சொற்களையும் கவனிக்க வேண்டும் என்பது மட்டுமே என் அவா. எனவே தான் அடி.ஆங்.சொற்களை, தொடர்புடைய சொற்கள் பகுதியில் இணைத்தேன்.


2.onelook தள இடப்பத்தில் நமக்குத் தேவையானப் பொருள் இருக்கிறது. நான் சேகரித்த தமிழ் தகவலைச் (pals e-dictionary 2.0) சரிபார்க்கவே அத்தளத்தினைக் கவனிக்கிறேன். நம் தளத்தினைக் காண்பவர்களுக்கு ஆதாரம் தேவையெனில், அவர்களுக்கு வலபக்கமுள்ள விருப்பமானத் தளத்தினை அங்ஙேயே குறுகிய நேரத்தில் காண வகைச் செய்ய ப்பட்டுள்ளது.எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தள முகவரியின், தளமுதற் பக்கத்தினை காணவே எனக்கு(25kbps) ஒரு நிமிடம் தேவைப்படுகிறது. என்னைப் போன்று காலவிரயத்தினைப் பிறர் சந்திக்கக் கூடாது என்பதே என் எண்ணம்.அந்த ஆங்கிலப் பக்கம் அவசியமே.

  • (எ.கா)philology என்றச் சொல்லை 'மொழிநூல்' என்று தமிழிலே மாற்றியுள்ளனர்.அதனை விவரிக்கிற ஆங்கிலதளம் 'மொழியறிவியல்' என்ற பொருளையே அறிவிக்கிறது.
  • எந்த ஆங்கில அகராதியினை விடவும், ஒரு படி மேலாக நம் தமிழ் விக்சனரி அமைய என்னுள் விருப்பம். அதற்கு ஒவ்வொரு பக்கத்திலும் நிழற் படங்கள், சொற்களஞ்சியம்(thesaurus), எடுத்துக் காட்டுகள், பிற மொழியாக்கங்கள், அப்பக்க சம்பந்தமான விக்கிபீடியா இணைப்பு, தேவைப்பட்டால் நிகழ்படம் .. போன்றவை அமைய விருப்பம். தானியங்கி செயல் படுவதால், இனி பரபரப்பு இல்லாமல் என்னால் செயல் பட முடியுமென நம்புகிறேன்.

3.(உசாத்துணை = துணை நூல் பட்டியல் = bibliography )என்றே க்ரியாவின் அகராதி உரைக்கிறது.இது பற்றி பின்னர் விரிவாகப் பதிவு செய்ய உள்ளேன்.

4. சில ஐயங்கள்..

1)'மூல ஆவணம்' என்பதற்கு பதில் 'ஆதாரமூலம்' என்று கொடுக்கலாமா?

2) பகுப்பு:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் என்பதனை எப்படி சேர்ப்பது?

3)தமிழ் விக்கிபீடியாவில் உங்கள் உரலும், உலக்கையும் நிழற் படம் கண்டேன். அதனை இங்கு கொண்டு வர இயலவில்லை? அது ஏன்? இங்கும் அதனையே மறுபடியும் கோப்பேற்றம் செய்யணுமா?

நன்றி. வணக்கம்.தகவலுழவன் 14:25, 9 மார்ச் 2008 (UTC)

தொடர்புடைய சொற்களைச் சேர்க்கும் பணியைக் கொஞ்சம் கொஞ்சமாக இயன்ற போது சேர்க்கலாம். பரவாயில்லை. எல்லா பக்கங்களில் இருந்தும் ஒரே பக்கத்துக்கு தொடுப்பு கொடுப்பது அவசியமாகத் தோன்றாததால் அடிப்படை ஆங்கிலச் சொற்கள் பட்டியலுக்கு தொடுப்பு தர வேண்டுமா என்று கேட்டேன். அதுவும், அவை தொடர்புடைய சொற்கள் என்ற தலைப்பின் கீழ் தருவது வாசகரைக் குழப்பி விடக்கூடும் என்று நினைத்தேன். [[பகுப்பு:பகுப்புப் பெயர்]] என்று பக்கத்தின் முடிவில் கொடுத்தால் அந்தப் பகுப்புக்கான தொடுப்பு வந்து விடும். பிறகு அந்த சிகப்பு வண்ணத் தொடுப்பைச் சொடுக்கி புதுப்பக்கத்தை உருவாக்கினால், அந்தப் பகுப்பின் கீழ் உள்ள அனைத்துச் சொற்களையும் காட்டும். மூல ஆவணம், ஆதார மூலம் என்று சொல்வதைக் காட்டிலும் ஆதாரம் என்றே சொல்லிவிட்டால் சுருக்கமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. பல இதழ்களிலும் இப்படி வெறுமனே ஆதாரம் என்று கொடுக்கக் கண்டிருக்கிறேன். மிகக் குறைந்த இணைய இணைப்பில் இருந்து நீங்கள் செய்யும் பணி மலைக்க வைக்கிறது. வாழ்த்துக்கள். --ரவி 15:03, 9 மார்ச் 2008 (UTC)

உங்கள் விரைவான பதில் என்னை அசர வைத்து விட்டது.உங்கள் கல்வியிலும் சிறக்க எனது வாழ்த்துகள்தகவலுழவன் 15:09, 9 மார்ச் 2008 (UTC)

வாழ்த்துக்கள்

தொகு

விக்சனரியில் உங்கள் உழைப்பைக் கண்டு மகிழ்ச்சி. இங்கே பார்த்தால் தானியங்கிகள் பற்றிய தகவல்கள் கிட்டலாம்.--Trengarasu 04:35, 5 மார்ச் 2008 (UTC).

எனது புது நண்பருக்கு உளங்கனிந்த நன்றி.வணக்கம்.தகவலுழவன் 14:47, 9 மார்ச் 2008 (UTC)
பாராட்டுக்கு நன்றி தகவலுழவன். அயராத உங்கள் உழைப்பு எனது தானியங்கியைக் காட்டிலும் மெச்சத்தக்கது. நேரம் கிடைக்கையில் தானியங்கியின் இயங்குநிரலை விளக்கத்துடன் வெளியிடுகிறேன். -- Sundar 07:28, 5 மார்ச் 2008 (UTC)
அப்புறம் ஒரு வேண்டுகோள். தானியங்கு பதிவேற்றத்தின் நிறைவில் பக்கங்களில் பிழைதிருத்தம், நடை செப்பம், இணைப்புகள் சேர்த்தல், மற்றும் தமிழிலிருந்து ஆங்கில சொற்களுக்கு இணைப்பு தருதல் முதலிய பல பணிகள் உள்ளன. நீங்கள் அவற்றில் உதவ வேண்டும். தற்போதைக்கு நீங்கள் தமிழ் சொற்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். தானியங்கி வேலை முடிந்தபின் விடுபட்ட சொற்களை மட்டும் சேர்க்கலாமே! -- Sundar 07:35, 5 மார்ச் 2008 (UTC)
சுந்தர், உங்களைப் போல நானும் அதனையே நினைத்துள்ளேன். உங்கள் தானியங்கி ஆளுமைக்கு,க்ரியா அகராதி உதவும் என நம்புகிறேன். ஏனெனில், அவர்கள் இ.நிரல்களை எழுதியுள்ளனர்.அவர்களின் தொடர்பு, உங்கள் நேரத்தினை சேமிக்கும். வணக்கம்.தகவலுழவன் 14:47, 9 மார்ச் 2008 (UTC)

படிமங்கள்

தொகு

விக்சனரியில் படிமங்களை இணைக்கத் தொடங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி. எடுக்கப்படும் படிமங்கள் காப்புரிமைக்குட்பட்டதாக இல்லாமல் இருப்பது முக்கியமாகும். ஏனைய தளங்களிலிருந்து படிமங்களை இங்கே இடுவது அவர்களின் காப்புரிமையை மீறிய செயலாகக் கருதப்பட்டு, விக்சனரி மீது வழக்குத் தொடரலாம். எனவே படிமங்களை இணைக்கும் போது காப்புரிமைத் தொடர்பில் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். காப்புரிமையற்ற படிமங்களை பொதுக் கோப்பகத்திலிருந்து பெறலாம். அங்கே காணப்படும் படிமங்களை இங்கே பதிவேற்றாமலே இணைப்புக் கொடுக்க முடியும் மேலும் காப்புரிமை பற்றிய கவலையும் கிடையாது. அங்கே காணப்படும் படிமங்கலுக்கு

[[படிமம்:படிமத்தின் பெயர்| படிமத்தின் அளவு (250px)| இடம் (left/right/center) | thumb | படிம விளக்கம்]]


என்றவறு இணைப்புக் கொடுக்கலாம். காப்புரிமைத் தொடர்பாக இன்னமும் விக்சனரியில் சரியான விதிகள் வரையப்படவில்லை எனினும் எப்போதாவது இது நடைப்பெறும் போது காப்புரிமை மீறிய படிமங்கள் நீக்கப்படும் அதனால் உங்கள் உழைப்பு வீணாகலாம். எனவே இப்போதிருந்தே காப்புரிமைப் பற்றி கவனமெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --Trengarasu 07:29, 12 மார்ச் 2008 (UTC)

தங்களின் தகவல்களுக்கு நன்றி. கவனமாகச் செயல் படுவேன்.தகவலுழவன் 11:26, 18 மார்ச் 2008 (UTC)

நிர்வாகி ஆக விருப்பமா?

தொகு

தகவலுழவன் உங்கள் தொடர் பங்களிப்புகளை கண்டு மகிழ்கிறோம். தளத்துக்கான நிர்வாகி அணுக்கம் பெறுவது உங்கள் பங்களிப்புக்களுக்கு இன்னும் கூடுதல் வசதி தரும் என்று நினைக்கிறோம். தவிர, இலட்சம் சொற்களை நெருங்கும் வேளையில் தளத்துக்கு பயனர் வரத்தும் அதிகமாகலாம் என்பதால் துப்புரவுப் பணியிலும் கவனம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. நிர்வாகி அணுக்கம் மூலம் முக்கியமாக நீங்கள் செய்யக்கூடியவை: வேண்டாத பக்கங்களை நீக்குவது, விசமத்தனம் செய்யும் பதிவர்களைத் தடை செய்வது, தேவையற்ற தொகுப்புகளை எளிதாக மீட்பது போன்றவை. உங்கள் ஒப்புதலைத் தெரிவித்தால் உங்களை நிர்வாகியாகத் தேர்ந்தெடுப்பதற்கான முறைப்படியான பணிகளைச் செய்யலாம்--ரவி 17:12, 18 மார்ச் 2008 (UTC)

இரவிக்கு,

வாழ்ந்த தமிழை,வாழ வைப்போம்.

1)தங்களின் அழைப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும்,எனது நிலையினால், சற்று தயக்கம் என்னுள் எழுகிறது. நான் ஏற்கனவே தெரிவித்தது போல, எனது கணினியறிவு மிகச் சொற்பம். வெறும் அனுபவ அறிவே. இப்போதைக்கு ஆர்வம் மட்டுமே.. இங்கு வந்து செல்லவே, நான் வருமானத்தினை இழக்க வேண்டியுள்ளது. எனவே, பங்களிப்பாளனாகவே இருப்பது நல்லதென நினைக்கிறேன். எவ்வளவு நாட்கள் இங்கு இருப்பேன் என்று எனக்கே தெரியாது. இருக்கிறவரை என்னால் முடிந்ததைச் செய்கிறேன். நான் என்னென்ன செய்ய வேண்டும்?

2)மிகச்சிறந்த 100 பக்கங்களை உருவாக்கி, அவற்றினை பல தமிழ் குழுமங்களைக் காணச் செய்து, பலரையும் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும் என்பது என் அவா. இச்செயல் மூலம் தமிழ் விக்சனரி / தமிழகராதியியலை உலகின் தலைச்சிறந்தவற்றுள் கொண்டு வர, என்னுள் 'தீ.'

3)தமிழ் விக்சனரியின் சிறந்த 1000பக்கங்களையாவது , இறுவட்டினில் கொண்டு வர ஏதேனும் மென்பொருள் உள்ளதா?

நன்றி.வணக்கம்.தகவலுழவன் 04:59, 21 மார்ச் 2008 (UTC)

தகவலுழவன், விக்சனரி ஒரு அகரமுதலி என்பதால் வெறும் ஆயிரம் பக்கங்களை இறுவட்டில் கொண்டு வருவது எவ்வளவு பயன் அளிக்கும் என்று தெரியவில்லை. விக்கிப்பீடியாவுக்கு இது போல் செய்வதுண்டு. இதற்கு என மென்பொருள் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நாமே இறுவட்டு ஆக்கினால் தான் உண்டு. எனினும், விக்சனரியின் இலட்சக்கணக்கான பக்கங்களையும் இணைய இணைப்பு இல்லாமல் கணினியில் தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ள இயல்வது போல் செயலிகள் செய்ய எண்ணி இருக்கிறோம். தாங்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பங்களிப்பதால் நிர்வாகியானால் மேலும் சுமைகளைச் சுமக்க வேண்டி வந்து விடுமோ என்று தயக்கமாக இருக்கிறது. எனவே தற்போதைக்கு பங்களிப்பதை மட்டும் தொடரலாம் என்று தோன்றுகிறது. நிர்வாகியவதற்கு பெரிய கணினி அறிவு ஏதும் தேவையில்லை. ஆனால், நிர்வாகப் பங்களிப்புக்கு கூடுதல் நேரம், இலவச கணினி அணுக்கம் கிடைக்கும் போது சொல்லுங்கள். உடனே நிர்வாகி ஆக்கலாம். நான் ஏற்கனவே ஒரு முறை உங்கள் மின்மடல் முகவரி கேட்டிருந்தேன். இன்னுமொரு முறை கேட்பதற்கு மன்னிக்கவும். சில விசயங்களை மின்மடலில் பேச விரும்புகிறேன். இல்லை, உங்கள் தொலைபேசி எண் தந்தாலும் அழைத்துப் பேச இயலும். நன்றி --ரவி 14:17, 21 மார்ச் 2008 (UTC)

தங்களுக்கு மின்மடல் விரைவில் எழுதுகிறேன். சிறு முயற்சியொன்றினை மேற்கொண்டிருக்கிறேன்.இரு வாரங்கள் பொறுக்கவும்.நன்றிகள் பல நண்பரே .வணக்கம்தகவலுழவன் 14:26, 21 மார்ச் 2008 (UTC)

வாழ்மொழி

தொகு

நீங்கள் பல இடங்களில், "வாழ்ந்த தமிழை,வாழ வைப்போம்." என்று இடுகின்றீர்கள். இது தவறான பொருளையும் உணர்வையும் தருகின்றது. ஏதோ தமிழ் மொழி ஒரு காலத்தில் வாழ்ந்தது போலவும், இன்று செத்து விட்டது போலவும், இனி உயிர் கொடுத்து வாழ வைப்போம் என்பது போலும் கருத்து தருகின்றது. தமிழ் மொழி, வாழ்மொழி ! வாழ்ந்த, வாழ்கின்ற, வாழும் மொழி. வினைத்தொகை. பல இடங்களில் தமிழுக்கு முன்னுரிமை இல்லாமல் இருப்பது உண்மை, எனவே மக்களிடையே எல்லாத் துறைகளிலும் நன்கு "வாழும்" மொழியாக இன்னும் ஓங்கி செழித்து வளர வேண்டும் என்று நாம் எல்லோருமே நினைக்கிறோம். உண்மைதான்.--செல்வா 15:50, 30 மார்ச் 2008 (UTC)

உங்களைப் போன்றவர்களிடம் கருத்தோட்டம் செய்வது எனக்கு மகிழ்ச்சியே. உங்கள் உளி, என்னைச் செதுக்குவதால் பரவசமடைகிறேன். ஒரு மாணவனின் பார்வையைப் பொறுத்தருள்க.'நம் மொழி வீழ் பாதையில் அடியெடுத்து வைத்தாயிற்று' என்பதில் எனக்கு வேதனையே. 'வாழ்ந்த' என்பதனைத் தவிர்கிறேன்.'தமிழின் பெருமை அதன் தொன்மையிலில்லை, அதன் தொடர்ச்சியில்.. ' என்பது உண்மைதானே? நன்றி. வணக்கம்.தகவலுழவன் 16:18, 30 மார்ச் 2008 (UTC)

நான் வெறும் ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டும் தராமல் தமிழிலும் விளக்கம் தர வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். அப்படித்தானே? My quest is now just to increase the number of words in Tamil. I shall elaborate on the Tamil meaning later. Am I making sense?

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer/2008&oldid=1284338" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Info-farmer/2008".