பயனர் பேச்சு:Info-farmer/2011

(பயனர் பேச்சு:தகவலுழவன்/2011 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic மற்றனரிகள்

.................................தேதியைக் கவனித்து பரணிடுக!...................................

மின்னஞ்சல் பதில் தொகு

தகவலுழவன்,

 மின்னஞ்சல் கண்டேன், மகிழ்ச்சி. பதிலளித்துவிட்டேன்.

பழ.கந்தசாமி 05:55, 10 சனவரி 2011 (UTC)Reply

பட்டறைகள் தொகு

மீடியாவிக்கி:sitenotice இல் புதிய பட்டறைகளுக்கான பின்வரும் அறிவிப்புகளை இணைத்து இற்றைப்படுத்த வேண்டுகிறேன்.

சென்னையில் பெப்ரவரி 6, 2011 அன்று விக்கிப்பீடியா பட்டறை

திருச்சியில் பெப்ரவரி 20, 2011 அன்று விக்கிப்பீடியா பட்டறை

--Sodabottle 09:34, 29 சனவரி 2011 (UTC)Reply

  • மீடியாவிக்கி:sitenotice -னை நிருவகிக்கும் அணுக்கம் எனக்கு இல்லை. பிற விக்சனரிகளில் அத்தகைய அணுக்கத்தை, அத்தளத்திற்கு அடிக்கடி வந்து செல்வோரிடம் உண்டு. இங்கு பழ.கந்தசாமி அவர்களுக்கு அத்தகைய அணுக்கம் இருப்பின் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். இல்லையெனில், நீங்கள் உடன்பட்டால், அத்தகைய அணுக்கம்(Bureaucrat) உங்களுக்கு வர என்ன செய்யவேண்டும்?--த*உழவன் 06:07, 30 சனவரி 2011 (UTC)Reply
நிருவாகிகளால் இதனைத் தொகுக்க இயலுமே. (விக்கிப்பீடியாவில் என்னால் இயலுகிறது).நிர்வாகியான நக்கீரன் இதனை டிசம்பர் 29ல் இங்கு தொகுத்துள்ளார். எனவே உங்களுக்கும் அணுக்கம் இருக்கும். மீண்டுமொரு முறை முயன்று பாருங்களேன்.--Sodabottle 07:24, 30 சனவரி 2011 (UTC)Reply

பெப்ரவரி 6, 2011 கார்ட்டே பிலாஞ்சு பட்டறை சென்னை தொகு

த*உழவன்! பெப்ரவரி 6, 2011 சென்னை எம்.ஐ.டீ. யில் நடைபெறவுள்ள கார்ட்டே பிலாஞ்சு பட்டறையில் [1] விக்சனரியைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். என்னென்ன விசயங்களைப் பற்றி பேசலாம் என்று கூறவும். --பரிதிமதி 10:55, 29 சனவரி 2011 (UTC)Reply

  • உங்களுடன்(சோடாபாட்டில்!,பரிதிமதி!) கைகோர்க்க ஆவலாக இருக்கிறேன். ஓரிரு நாட்களுக்கு முன் தொடர்பு கொள்கிறேன்.
  1. ஏற்கனவே உள்ள கட்டுரைகளைக் காணச் செய்து, அவர்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
  2. ஏற்கனவே உள்ள கட்டுரைகளுக்கு அக இணைப்பு தர கற்றுத்தரவேண்டும்.
  3. எல்லாவற்றிற்கும் மேலாக, பேச்சுப்பக்கத்தினைப் பயன்படுத்த கற்றுத் தரவேண்டும். ஏனெனில், புதிய செய்திகள் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் எனக்குத் தெரியவில்லை. அதுவே அவர்களிடன் தொடர்ந்து கைகோர்க்க உதவும்.
  4. இரவி முன்பு எனக்கு வழிகாட்டியது போல, நமக்குத் தேவைப்படும் ஆலோசனைகளைக் கேட்கலாம். அப்படி வினவும் போது, அவர்களுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் அதிகமாகும்.--த*உழவன் 06:01, 30 சனவரி 2011 (UTC)Reply

பார்க்க: பேச்சு:அஸ்கா--Eldiaar 07:02, 8 பெப்ரவரி 2011 (UTC)

த*உழவன், மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும். பழ.கந்தசாமி 05:25, 13 பெப்ரவரி 2011 (UTC)

  • கண்டு பதிலளித்துள்ளேன். அவசரமில்லை.--த*உழவன் 05:42, 13 பெப்ரவரி 2011 (UTC)

மின்னஞ்சல் காண்க! தொகு

தகவலுழவன், மின்னஞ்சல் பார்க்கவும். பழ.கந்தசாமி 18:59, 18:59, 15 பெப்ரவரி 2011 (UTC)

படம் தேவை தொகு

பொன் வண்டுவின் படம் எங்கு கிடைக்கும்?--Eldiaar 10:15, 28 பெப்ரவரி 2011 (UTC)

இதன் ஆங்கிலப்பெயர் என்ன? இதில் பல இனங்கள் உள்ளனவென்று தெரிகிறது. இது காப்புரிமைப்படம். இதுதானே? விக்கி ஊடக நடுவத்தில் நமது விக்சனரிக்குத் தேவையானப்படங்களைத் தேடலாம். ஊடக நடுவத்தில் உள்ள கோப்பின் பெயரை, இங்கு இட்டால் படம் தெரியும். மாதிரிக்கு , காகம் என்பதனைக் காணவும். இதற்குரிய கோப்பினை ஆங்கிலத்தில் அங்கு தேடி, கோப்பின் பெயரினை இங்கு இணைத்தால் தெரியும். --தகவலுழவன் 10:38, 28 பெப்ரவரி 2011 (UTC)

இதோ காமன்சில் பொன்வண்டு பேரினம் பகுப்பு - [2]--Sodabottle 15:12, 28 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி. சோ.பா. தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்கிறேன். அதில் சில சிற்றினங்களில் ஏதோ இணைப்புக் கோளாறு வருகிறது. --தகவலுழவன் 16:00, 28 பெப்ரவரி 2011 (UTC)

பொன் வண்டுவின் ஆங்கிலப் பெயர் jewel beetle ஆகும். இதன் சரியான படம் இந்த (http://www.crjayaprakash.com/photography/main.php/key/Pon+Vandu?g2_itemId=3152) முகவரியில் இருக்கிறது, ஆனால் அதைப் பயன்படுத்தும் உரிமை நமக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. --Eldiaar 16:28, 28 பெப்ரவரி 2011 (UTC)

இடப்பக்கமுள்ள ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையின் படி இதில் ஆயிரகணக்கான சிற்றினங்கள் உள்ளன. நீங்கள் காட்டிய காப்புரிமை படம், தமிழகத்தின் பொன்வண்டு. சிறுவயதில் அதனுடன் விளையாண்ட ஞாபகம் வருகிறது. அங்கு கீழுள்ள விக்கிசிற்றினங்கள் தளத்திற்கு சென்று கண்டபொழுது பல மொழிகளில் அமைந்துள்ள அதன் பெயர்களைக் காணமுடிந்தது. ஆங்கிலத்திலும் வேறு பெயர்கள் உள்ளன தெரிகிறது. எனக்கென்று ஒரு மழலைப் பட்டாளம் உள்ளது அவர்களிடம் சொல்லி அதனைப் பிடித்து படம் எடுக்க நினைக்கிறேன். வருவது வெயில் காலமென்பதால் சற்று கடினமே. படமெடுத்தால் சொல்கிறேன். வணக்கம்.--தகவலுழவன் 16:42, 28 பெப்ரவரி 2011 (UTC)

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

நானும் அதனுடன் நிறைய விளையாடியிருக்கிறேன். அந்த நினைவலைகளின் காரணமாகத்தான் இந்த வண்டுவின் பெயரை இங்கு இட்டுள்ளேன். எனினும் படத்திற்கு நானும் முயற்சிக்கிறேன். நன்றி.--Eldiaar 17:05, 28 பெப்ரவரி 2011 (UTC)

  • சரி.மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் 00:42, 1 மார்ச் 2011 (UTC)}

தமிழ்வார்த்தைகள் - உதவி தொகு

தகவலுழவன் அவர்களுக்கு - உச்சி என்பது தமிழ் வார்த்தையா அல்லது வடமொழியா என்பதைக் கூறவும். மேலும் அது வடமொழியாயின் அதற்கான தமிழ் இணை வார்த்தைகள் சில கூறவும். மேலும் எனக்கு ஒருப் பொருளைக் குறிக்கும் சொற்கள் இணையத்தில் துலாவ ஏதேனும் வலைத்தளம் உள்ளதா அல்லது வடமொழிகளை அறிய உதவும் ஏதேனும் நூலின் பெயரை அல்லது மின்னூல் இருந்தால் குறிப்பிடுங்களேன். எனக்கு சொல்வளம் மிகவும் குறைவென்பதால் உங்கள் உதவியை நாடுகிறேன். உதவுங்கள்.--சிங்கமுகன் 15:07, 24 ஏப்ரல் 2011 (UTC)

  • நான் அறிந்தவரை அத்தகைய வளமையான தமிழ் வலைத்தளம் இல்லை. அதற்காக பல முயற்சிகளை எடுத்துவருகின்றனர். தமிழ் சொற்களஞ்சியம் புத்தகவடிவில் சில உள்ளன. வரலாற்றுப் பெருமை வாய்ந்த நூல் ஒன்றினை(தமிழ்-தமிழ்-ஆங்கிலம்), மின்னூலாக்கம் செய்யும் பணியில் உள்ளேன். அப்பணி முடிந்தவுடன் அதற்கான இணைப்பை உங்களுக்குத் தருகிறேன். உச்சி முகர்தல், உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... போன்ற வரிகள் காலத்தினையும் கடந்து நிற்கிறது. பேரறிஞர் பவுல் எனக்கு வழிகாட்டியது போல, எது தமிழ் எது வடமொழி என்ற ஆய்வு மயக்கத்தையேத் தரும். பாமரரும் அறிந்த சொல் உச்சி என்பது. எல்லைகளைக் கடப்போம். தமிழ் வளர்ப்போம். மீண்டும் தொடர்வோம். --தகவலுழவன் 06:52, 18 மே 2011 (UTC)Reply
  • உச்சி என்பது தமிழ்ச்சொல்தான் என்று நினைக்கின்றேன். உயர்வு உயர்ச்சி உச்சி. முச்சி --> உச்சி என்பது தெளிவான எடுத்துக்காட்டு. முச்சி என்றால் தலை உச்சி.--செல்வா 14:27, 18 மே 2011 (UTC)Reply

உங்கள் குறிப்பு (கன்னட சொற்கோவை) பற்றி தொகு

உங்களைச் சில காலமாகக் காணோமே என்று நினைத்தேன். ஏதோ மிக முக்கியமான அலுவல்/பொறுப்பு காரணமாக வரவில்லை என்றே எண்ணி இருந்தேன். உங்கள் தந்தையார் உடல்நலம் இல்லை என அறிந்து வருந்துகிறேன். உங்கள் உதவி அவருக்கு மிகவும் முக்கியம். இத்தகவலைப் பக்ரிந்து கொண்டமைக்கு நன்றி. விரைவில் அவர் நலமடைய வேண்டுகிறேன். கனண்ட மொழிச் சொற்கோவையில் இருந்து ஏற்கனவே தமிழ் விக்சனரியில் உள்ள சொற்களை நீக்கிய பின் நீங்கள் கருதுமாறு தானியங்கி வழி வலையேற்றா இயன்றால் அருமையாக இருக்கும். ஆனால் தக்க தமிழ் மொழி பெயர்ப்புகள் முதலில் பெற வேண்டுமே! --செல்வா 14:27, 18 மே 2011 (UTC)Reply

  • தந்தையின் நலன் குறித்தமைக்கு மிக்க நன்றி. கடந்த ஒரு மாதமாக நான் கவனித்த வரை, அதிலுள்ள பிழைகளை(நான் நீக்கியவைகள் = குறியீடுகள், இருமுறை வரும் சொற்கள் போன்றவை) நீக்கவிட்டேன். எனினும், கொடுக்கப்பட்டப் பொருளில் எத்தகைய மாற்றத்தினையும் நான் உண்டாக்கவில்லை. தக்க மொழிபெயர்ப்புகள் இருப்பதாகவே, நான் கருதுகிறேன். பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர், அதனை ஏற்பர் என்றே எண்ணுகிறேன்.நம் விக்சனரியில் இல்லாத, கனடிய சொற்கோவையின் சொற்களைப் பிரித்து எடுத்து விட்டு தொடர்பு கொள்கிறேன். வணக்கம்--தகவலுழவன் 08:32, 19 மே 2011 (UTC)Reply



பொருள் வார்ப்புருவிலும் அதுபோன்ற வார்ப்புருக்களிலும் மாற்றம் வேண்டும் தொகு

எனது இந்தக் கருத்தை பார்க்கவும். பகுதியில்(section) background color வேண்டுமானால் நிர்வாகிகளின் உதவி தேவைப்படுகிறது. -- மாகிர் 10:24, 2 மார்ச் 2011 (UTC)

தொடர்புக்கு? தொகு

தங்களுடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்வது? உங்களுடைய தொடர்பு எண்ணை அனுப்பவும். என் மின் அஞ்சல் என் பயனர்(Eldiaar) பக்கத்தில்! ---Eldiaar 18:15, 13 மார்ச் 2011 (UTC)

வருக! வருக! மே முடிவற்குள் 2 லட்சம் தொடலாமா? தொகு

தகவலுழவன்! நீண்ட விடுமுறைக்குப் பின் திரும்பிவரும் உங்களை வருக வருக என வரவேற்கிறோம். மே முடிவற்குள் 2 லட்சத்தைத் தொட முயலாலமா? பழ.கந்தசாமி 05:12, 20 மே 2011 (UTC)Reply

  • இயலும் என நினைக்கிறேன்.கைவசம் கனடிய நண்பர்களின் மொழிபெயர்ப்புகளை ஆயுத்த நிலையில் வைத்துள்ளேன். நாளை மறுநாள் தெளிவு பிறக்கும். இதுவரை கொஞ்சம் வீட்டுப்பணிகளால் அலைச்சல். வழக்கமாக இணைய வேகம் அதிகமாக இருக்கும் காலைப் பொழுதில், மின்வெட்டு இருப்பதால் இப்பொழுது பணியாற்றுவதில் பின்னடைவு உள்ளது. சீன மொழி பெயர்ப்புகளை தங்களின் பார்வைக்கு அனுப்பியதாக ஞாபகம் உள்ளது. அதில் ஆயிரம் அடிப்படை சீனச் சொற்களையும், அதன் ஆங்கிலம், தமிழ் மொழி பெயர்ப்புகளையும் இணைத்திருந்தேன். அதுபற்றி அறிய ஆவல். இன்னும் சிறிது நேரத்தில் அப்பாவுடன் மருத்துவரைக் காண செல்ல வேண்டும். நாளை சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் 05:24, 20 மே 2011 (UTC)Reply


விக்கியன்பு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது விக்கியன்பு என்றொரு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை விக்சனரியிலும் நிறுவலாமா? தங்களது கருத்து தேவை. --Surya Prakash.S.A. 10:23, 21 மார்ச் 2011 (UTC)

  • சூர்யா! விக்கியன்பு பற்றி, இதுவரை அறிந்து கொள்ள நேரம் ஒதுக்க இயலவில்லை. நீங்கள் சோடபாட்டிலிடம் இதுபற்றி கருத்து கேட்க வேண்டுகிறேன். அவரின் அனுபவமும், தொலைநோக்கும் உங்களுக்குகாததற்கு மன்னிக்கவும்.--தகவலுழவன் 07:17, 18 மே 2011 (UTC)Reply

சொற்கோவை தொகு

நமக்கு கொடையளித்தவர்கள் இத்தளத்தினரா. அவர்களது இணைய தள /வலைப்பதிவு முகவரியினையும் திட்டப்பக்கத்தில் குறிப்பிடலாம்.--Sodabottle 06:16, 25 மே 2011 (UTC)Reply

  • முறைப்படி அறிந்து கொண்டு ஆவணப்படுத்தவோம். இப்பொழுது இதுபற்றி பழ.கந்தசாமி அரட்டை அரங்கத்தில் கலந்துரையாடுகிறார். பிறகு, விரிவாகத் தெரிவிக்கிறேன்.--06:50, 25 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பேரகரமுதலி தொகு

பேரககரமுதலியிலிருந்து சொற்களைச் சேர்க்கும்போது அங்குள்ள பயன்பாடு, சொற்கூட்டல் முதலியவற்றையும் மறக்காமல் இடவும். எடுத்துக்காட்டாக அக்களிப்பு = அகம் + களிப்பு; சக்களத்திகள் அக்களிப்பொடு கெக்கலிப்பட (சர்வச. கீர்த். 186). பழ.கந்தசாமி 06:20, 26 மே 2011 (UTC)Reply

சரி.இதில் (சர்வச. கீர்த். 186). என்பது என்ன? இப்படி பல சுருக்கங்கள் உள்ளன. அவற்றின் பொருள் தெரியாமல் இணைப்பதில்லை.ஆனால், சூடா என்றால் சூடாமணி நிகண்டு என்று முழுமையாக க் குறிக்கிறேன்.(எ. கா.) அக்கன் --06:25, 26 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

1000 சொல் பாய்ச்சல் தொகு

தகவலுழவனே! இம்முறை அதிவேகம். நன்றி. பழ.கந்தசாமி 13:57, 16 சூன் 2011 (UTC)Reply

அதானே. கண் மூடி கண் திறப்பதற்குள் வந்து விட்டது :-)--சோடாபாட்டில்உரையாடுக 14:03, 16 சூன் 2011 (UTC)Reply
  • சோ.பா! சரியாச் சொன்னீங்க. நான் தூங்கச் செல்கையில், 102674. விழித்தால், 203001. படுத்துக்கொண்டே ஜெயிப்பது இது என்றால், தொடர்ந்து தூங்க ஆசை. நன்றி, தகவலுழவன்! பழ.கந்தசாமி 18:59, 16 சூன் 2011 (UTC)Reply
இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா!. எப்பவும் விரிவாக ஒரே வேகத்தில், பதிவேற்றுவது உங்கள் இருவரின் பாணி. நான் எப்பவாவது, வேகமான பதிவிடுவேன். இருப்பினும், வரும் பொங்கலுக்குள் இன்னும் சில இடங்களை, எட்டிப்பிடிக்க என்னுள் எண்ணம். அவ்வப்பொழுது எனது ஐயங்களை தீர்க்கும் உங்கள் இருவருக்கும் தான் என் நன்றிகளைக் கூறவேண்டும். அக இணைப்புகள் கொண்ட சொற்களைக் கொண்டதாக பதிவேறியவைகள் இல்லையே என ஏங்குகிறேன். வாழிய தமிழ் நலம். வணக்கம்--23:24, 16 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மீண்டும் பாய்ச்சல்! தொகு

தகவலுழவன், அதிவேகப் பாய்ச்சலில் செல்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி. பழ.கந்தசாமி 00:18, 1 சூலை 2011 (UTC)Reply

என்னுள் இருந்து வழிநடத்துபவரில் நீங்கள் முதன்மையானவர். சோ.பா.(சோடாபாட்டில்) விடம் அடிக்கடி அட்டவணைச்செயலி ஐயங்கள் கேட்கிறேன்.அதனால் அவரும் எனது சமீப வழிகாட்டி. அதனால் தான் உங்களுக்கு அடிக்கடி மின்னஞ்சல் பண்ணுவதில்லை.--00:22, 1 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

interwiki linking தொகு

தொலைபேசியில் உங்களிடம் கூறியவாறு excel, notepad++ உபயோகித்து கீழுள்ளவாறு உருவாக்கிக்கொள்ள வேண்டும்

<Replacements>

<Replacement><Find>புரோட்டானின்</Find><Replace>[[புரோட்டான்|புரோட்டானின்]]</Replace><Comment /><IsRegex>false</IsRegex><Enabled>true</Enabled><Minor>false</Minor><BeforeOrAfter>false</BeforeOrAfter><RegularExpressionOptions>IgnoreCase</RegularExpressionOptions></Replacement>

<Replacement><Find>அக்கறை</Find><Replace>[[அக்கறை]]</Replace><Comment /><IsRegex>false</IsRegex><Enabled>true</Enabled><Minor>false</Minor><BeforeOrAfter>false</BeforeOrAfter><RegularExpressionOptions>IgnoreCase</RegularExpressionOptions></Replacement>

<Replacement><Find>அக்கறையற்ற</Find><Replace>[[அக்கறையற்ற]]</Replace><Comment /><IsRegex>false</IsRegex><Enabled>true</Enabled><Minor>false</Minor><BeforeOrAfter>false</BeforeOrAfter><RegularExpressionOptions>IgnoreCase</RegularExpressionOptions></Replacement>

<Replacement><Find>அகதி</Find><Replace>[[அகதி]]</Replace><Comment /><IsRegex>false</IsRegex><Enabled>true</Enabled><Minor>false</Minor><BeforeOrAfter>false</BeforeOrAfter><RegularExpressionOptions>IgnoreCase</RegularExpressionOptions></Replacement>

<Replacement><Find>அகரமுதலி</Find><Replace>[[அகரமுதலி]]</Replace><Comment /><IsRegex>false</IsRegex><Enabled>true</Enabled><Minor>false</Minor><BeforeOrAfter>false</BeforeOrAfter><RegularExpressionOptions>IgnoreCase</RegularExpressionOptions></Replacement>

</Replacements>


அதாவது,

# முதல் காலத்தில் <Replacement><Find>
# இரண்டாவது காலத்தில் தேடவேண்டிய சொல் உதா புரோட்டானின்
# மூன்றாவது காலத்தில் </Find><Replace>
# நான்காவது காலத்தில்  மாற்றப்படவேண்டிய சொல் உதா [[புரோட்டான்|புரோட்டானின்]]
# ஐந்தாவது காலத்தில் </Replace><Comment /><IsRegex>false</IsRegex><Enabled>true</Enabled><Minor>false</Minor><BeforeOrAfter>false</BeforeOrAfter><RegularExpressionOptions>IgnoreCase</RegularExpressionOptions></Replacement>

பிறகு இந்த ஐந்து காலங்களையும் காப்பி செய்து notepad++ போட்டு பின் find and replace ல் >[\s]+ (check reg exp)தேடி பின் > மாற்றிக்கொள்ளவேண்டும் (இடைவெளிகளை நீக்குவதற்கு)
அதேபோல் மறுபடியும் [\s]+< என்று தேடி < replace செய்யவும்

இதனை AWB settings.xml கோப்பில் சேமித்து பின்னர் import செய்து ஓட்டி விட்டால் interwiki ready. (இன்னும் மேம்படுத்தலாம்). mahirbot சோதனைக்காக ஓட்டியிருக்கிறேன்.

மாகிர் 18:22, 5 சூலை 2011 (UTC)Reply

மிக்க நன்றி மாகீர். Notepad++ v5.9.2 Installer-ஐ இங்கிருந்து நிறுவிக் கொண்டேன். சரியா? இதற்கு முன் இதனை நான் பயன்படுத்தியது இல்லை. நீங்கள் சொன்ன வழிமுறைகளை செய்துவிட்டு தொடர்பு கொள்கிறேன்.--23:53, 5 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

  • மேற்கூறினபடி செய்ய கற்றுக் கொண்டேன்.இதனை AWB settings.xml கோப்பில் சேமித்து பின்னர்.. என்பதிலிருந்து எப்படி என்று புரியவில்லை? AWBயின் find and replace வசதிக்குள் எப்படி பயன்படுத்துவது? ஆர்வமுடன் முடிக்கும்--06:43, 3 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தகவலுழவன்! வேகப்பத்தாயிரம், எல்லாப் புகழும் உங்களுக்கே! தொகு

தகவலுழவன், இந்தப் பத்தாயிரத்தை எட்ட எத்தனை நாட்கள் எனக்கவனிக்கவில்லை. இவ்வேகத்துக்கான எல்லாப் புகழும் உங்களுடையதே. நன்றி. 02:45, 7 சூலை 2011 (UTC)

மே 25 இலிருந்து 12,000 கூடியுள்ளோம். தகவலுழவன் புயல் விக்சனரியைத் தாக்கியுள்ளது :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:30, 7 சூலை 2011 (UTC)Reply

சோ.பா!உங்களது பலவேலைகளுக்கும் இடையில், எனக்கு அவ்வப்பொழுது அட்டவணைச்செயலியில் ஏற்படும் ஐயங்களை தீர்த்து வருகிறீர்கள். இன்னும் முழுமையாகக் கற்கவில்லை. vlook-upபற்றியதொடுப்பை என்னால் கற்க இயலவில்லை. அது இருந்தால் இன்னும் சிறப்பாக குறைந்த நேரத்தில், அதிக பக்கங்களை பதிவேற்ற முடியும்.

மற்றொன்று மின்தடை.இன்று காலை 8மணியிலிருந்து 11.30மணிவரை மின்தடை. எப்பவரும் என்று உட்கார்ந்திருந்து வெறுத்து விட்டேன். நல்ல தூக்கம் வரும் நேரம், மின்சாரம் வந்துவிட்டது. இனி என்ன தானியங்கியை ஏவிவிட்டு ஒரு குட்டி தூக்கம் தூங்க வேண்டியது தான்.

பழ.கந்தசாமி பைத்தானில் இயங்கும் விதத்தைக் கற்றுத் தருகிறேன் என்று கூறினார். நான்தான் சோம்பேறித்தனத்தால், இன்று வரை கற்காமல் இருக்கிறேன். விரைவில் அதனைக் கற்க ஆசை. வின்டோசிலிருந்து செயல்படுவது, கொஞ்சம் கொள்கைக்கு நெருடலாக இருக்கிறது.

முத்தமிழில் மூன்று இலட்சம் தமிழ்சொற்கள்! என்பதே எனது இலக்கு.எல்லாம் விக்கிநண்பர்கள் இருக்கும் தெம்புதான்.--06:43, 7 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

  • தகவலுழவன், ஆயிரம் ஆயிரமாய் சொற்களை அளிக்கும் உங்களுக்கு, மீண்டும் மீண்டும் நன்றி! 04:36, 14 சூலை 2011 (UTC)
உஸ் அப்பாடா வேகம் கண்ணக் கட்டுதே :-). --சோடாபாட்டில்உரையாடுக 16:12, 16 சூலை 2011 (UTC)Reply

wrong meaning தொகு

  1. manufacturing - from raw materials to finished products.
  2. production - தயாரித்தல் just to change the shape.
simply, manufacturing is the multiple or complete production.
so for the word manufacturing தயாரித்தல் is wrong.
for production only தயாரித்தல் is correct.
how can i give this difference in that page?
may i give like this? "குறிப்பு"
or any other way means reply me.--தென்காசி சுப்பிரமணியன் 19:38, 4 ஆகத்து 2011 (UTC)Reply

இரண்டிலுமே விளக்கம்என்ற உபப்பிரிவினை ஏற்படுத்தி உள்ளேன். அங்கு உங்கள் குறிப்பினைத் தருக.தவறானதை, உரையாடல் பக்கத்தில்குறிப்பிட்டு நீக்கவும். பொதுவாக பலச்சொற்கள் தானியங்கி மூலம், இங்கிருந்து பதிவேற்றம் செய்தவை.இங்குள்ள அனைத்தும் சரிபார்க்கப்படாமல்தான் பதிவேற்றம் செய்யப்பட்டது. அவ்வப்பொழுது, பலர் அவர்களுக்கு விருப்பமானத்துறைகளில் சரிபார்க்கின்றனர். அதுபோல நீங்களும் சரிபார்க்க முடிந்தால், மகிழ்ச்சியே. கீழுள்ள பொறியியில்பகுப்பில், மேலும் பல சொற்களைக் காணலாம்.அங்கு இல்லாத சொற்களை உருவாக்கக் கோருகிறேன். நன்றி.வணக்கம்.--01:28, 5 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

விக்கி மேற்கோள் தொகு

தகவலுழவன், விக்கி மேற்கோளை எவ்வாறு தொகுப்பது. அதில் பகுப்புகள் கிடையாதா? அதில் முதற்பக்கத்தில் 36 மேற்கோளென்று உள்ளது. ஆனால் 36க்கும் அதிகமாக இருக்கின்றனவே? குழப்பமாக இருக்கிறது.--தென்காசி சுப்பிரமணியன் 21:15, 11 ஆகத்து 2011 (UTC)Reply

உங்கள் தொகுத்தலைப் பார்த்தேன். தற்பொழுது 38என உள்ளது. சில நேரங்களில், 30நிமிடங்களுக்குப் பிறகு தெரியும்.மற்றொன்று நீங்கள் உள்ளிடும் பைட்டுகளின் அளவினைப் பொறுத்தும் அதிகமாகும். இருப்பினும், மிகச்சரியாக அதுபற்றி என்னால் அங்கு தொகுத்தல் பணிகளைச் செய்யாத தால் அறியமுடியவில்லை.--02:23, 12 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Invite to WikiConference India 2011 தொகு

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Info-farmer,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

மீடியாவிக்கி_பேச்சு:Common.css பற்றி தொகு

மீடியாவிக்கி_பேச்சு:Common.css பற்றி பதில் அளித்திருக்கின்றேன். தயவு செய்து பார்க்கவும். --ஜெயரத்தின மாதரசன் 09:36, 18 ஆகத்து 2011 (UTC)Reply

20:1 தொகு

தினம் ஒரு சொல் திட்டத்தில் 20 தமிழ் சொற்களுக்கு ஒரு வேற்று மொழி சொல் காட்சிப்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (நீங்கள் விடுப்பில் இருந்த போது :-) ). எனவே 20 நாட்களுக்கு ஒரு வேற்று மொழிச் சொல்லைச் சேர்க்குமாறு வேண்டுகிறேன். (ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே மூன்று வந்து விட்டன) --சோடாபாட்டில்உரையாடுக 04:57, 20 ஆகத்து 2011 (UTC)Reply

சரி.--05:05, 20 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
மீண்டும் இரு ஆங்கிலச் சொற்கள் வந்துள்ளனவே. ஆலமரத்தடியில் உரையாடி எதிர்ப்பின்றி உருவான கொள்கையென்பதால், கொள்கையை மாற்றி விட்டு இதைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். (எனக்கொரு எதிர்ப்புமில்லை, ஆனால் திட்டப்பக்கத்தில் விதிமுறைகளின் கீழ் சேர்த்துள்ளேன். அதை நாமே மீறக் கூடாதென்பதால் இந்த வேண்டுகோள்)--சோடாபாட்டில்உரையாடுக 06:38, 28 ஆகத்து 2011 (UTC)Reply
//மீண்டும் இரு ஆங்கிலச் சொற்கள் வந்துள்ளனவே.// புரியலை.--06:42, 28 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
தினம் ஒரு சொல் பற்றியா? சரி செய்து விடுகிறேன்.--06:53, 28 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Pika தொகு

Pika-என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ப்பெயர் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் 11:25, 30 ஆகத்து 2011 (UTC)Reply

அச்சொல், Tungusic மொழிகளிலிருந்து வந்ததாகத் தெரிகிறது. அதன்(30சிற்றினங்கள்) வாழிடம், பெரும்பாலும் குளிரான மலைப்பாறைகளுக்கிடையேதான் உள்ளது. பெரும்பான்மையான விலங்குகள் பகலில் தூங்கும்.இரவில் அல்லது விடியற்காலையில்தான் வேட்டையாடும். ஆனால் இது பகலில் மட்டுமே தனது உணவினைத்தேடுகிறது. மேற்கண்டவைகளை வைத்து கருதும் போது, இதனை பாறைமுயல் என அழைக்கலாம்.

--16:04, 30 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

உழவித் தகவல் தந்த தகவலுழவனுக்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் 14:59, 31 ஆகத்து 2011 (UTC)Reply

பேய்வாய்ப்புலி தொகு

பேய்வாய்ப்புலி என்ற விலங்குக்கு உரிய ஆங்கில உயிரியல் பெயர் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் 14:30, 4 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இதுவரை அதுபற்றிய தகவலை என்னால் அறிய முடியவில்லை. --16:44, 11 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

எனது கடைசி இரண்டு கட்டுரையை அழித்துவிடுங்கள். --இராஜ்குமார் 16:38, 11 செப்டெம்பர் 2011 (UTC)Reply

நீக்கிவிட்டேன். நீக்கப்படவேண்டிய கட்டுரையில்{{delete}.} என இட்டால் மற்றவரும், நீக்கமுடியும்.--16:44, 11 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Tamil Bot திருத்தங்கள் தொகு

இது இடும் சொற்களில் காற்புள்ளியோ, அரைப்புள்ளியோ பொருட்களைப் பிரிக்கவேண்டும். இல்லையெனில், அவையின்றி இடப்படும் பக்கங்களை மீண்டும் திருத்தவேண்டுமே! பழ.கந்தசாமி 07:12, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

தலைப்புச்சொல்லின் பிழைகளைக் களைவதிலே கவனமாக இருந்து விட்டேன்.பொருட்பகுதியில் காற்புள்ளியையோ, அரைப்புள்ளியையோ இட முயன்றேன். இயலவில்லை.அக்கோப்பை தங்களுக்கு அனுப்புகிறேன். வழி காட்டவும்.--தகவலுழவன் 07:27, 16 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..Reply

தானியங்கி அணுக்கம் தொகு

எனது தானியங்கி அணுக்க விண்ணப்பதிற்கு எப்பொழுது முடிவு கிடைக்கும். ஏன் யாரும் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை. நான் சரியான இடத்தில் தானே விண்ணப்பித்து உள்ளேன். --இராஜ்குமார் 07:10, 19 செப்டெம்பர் 2011 (UTC)Reply

  • சரிதான். நான் TamilBOT கணக்கு வாங்குவதிலும் சற்று கால தாமதம் ஏற்பட்ட்டது. இன்னும் ஒரு வாரம் பார்ப்போமே? இங்கு இரவிதான் அத்தகைய கணக்கை செயற்பாட்டைச் செய்வாரென்று எண்ணுகிறேன். அவர் முன்பு போல அடிக்கடி வருவதில்லை. தனிவாழ்க்கைக் காரணமாக காலதாமதம் ஏற்படலாம். நாம் பங்களிக்கும் இடத்தில் ஒன்றுபட்டுள்ளோம். இது அலுவலகம் அல்லவே? காத்திருப்போம்.--07:29, 19 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

விக்சனரியின் தரம் தொகு

விக்சனரியின் தரம் மதிப்பீட்டை எங்கு பார்க்கலாம். அதனை எவ்வாறு மேம்படுத்துவது. --இராஜ்குமார் 20:14, 24 செப்டெம்பர் 2011 (UTC)Reply

செல்வா இதுபற்றியத் தொடுப்பைக் கொடுத்தார். தெளிவாக உணர அவரிடம் கேட்டுப் பாருங்கள்.நன்றி.வணக்கம்.--23:14, 18 அக்டோபர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தினம் ஒரு சொல் தொகு

தகவலுழவன் அவர்களுக்கு,

விக்சனரி முகப்புப் பக்கத்தில் வலப்பக்கம் தோன்றும் தினம் ஒரு சொல் என்பதின் தினம் என்பது தமிழர்களின் வழக்கத்தில் இருந்தாலும் அது வடமொழியாகும். இதை நாளும் ஒரு சொல் என்று மாற்றினால் அழகாக இருக்கும். நன்றிகளுடன். --சிங்கமுகன் 16:03, 18 அக்டோபர் 2011 (UTC)Reply

நிச்சயம் செய்வோம். தற்பொழுதுள்ள நடைமுறை, அடுத்த மாதம் இறுதி வரை இருக்கும்.சனவரி முதல் அதிலிட்ட உள்ளீடுகள் தானாகவே தோன்ற வேண்டும். அப்படி தோன்றினால், தமிழுக்கு மாற்றுவோம். கடந்த ஒரு வருட காலம், அதில் உள்ளீடு செய்தோம். அனைத்தும் சரியாக இயங்கினால், அத்தகைய மாற்றத்தை கொண்டு வருதல் எளிது. இப்பொழுது மாற்றினால், எங்கு தவறு செய்தோம் என்று குழப்பம் வரலாம். இத்திட்டத்தை கொண்டு வந்த மாகிரிடம் பெயர் மாற்றத்தை முன் நிறுத்துவேன். பொறுக்கவும். மிக்க நன்றி. வணக்கம்.--தகவலுழவன் 23:12, 18 அக்டோபர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..Reply
ஒரு சிரமமும் இல்லை. கண்டிப்பாக பொறுமை காக்கிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 06:22, 19 அக்டோபர் 2011 (UTC)Reply

நெல்லிக்காய் தொகு

In ta.wiki they gave nellikai have 3 tastes. But here they gave 6 tastes. actually which is correct. -tenkasi subramanian அறுசுவையும் இருக்கின்ற உணவுப்பொருட்கள் ஒரு சில தான் உள்ளன. அவற்றில் நெல்லிக்காயும் ஒன்று. நான் கற்ற அளவில் இங்கு எழுதப்பட்டிருப்பது சரியே.--18:57, 25 நவம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மற்றனரிகள் தொகு

http://www.urbandictionary.com/define.php?term=kumari%20kandam இவ்விணைப்பை பார்க்கவும். இதை (கரியரவனட) விக்சனரியில் இடலாமா?--தென்காசி சுப்பிரமணியன் 08:34, 28 நவம்பர் 2011 (UTC)Reply

  • குமரிக்கண்டம் தொடுப்பைக் கண்டேன். அதில் அன்றைய தமிழுக்கும், இன்றைய தமிழுக்கும் உள்ள சொல்லைத் தான் மேலே கொடுத்துள்ளீர்கள் என எண்ணுகிறேன். எனக்கு அதன்பொருள் புரியவில்லை.கட்டுரை மகிழ்ச்சியைத் தந்தது. --03:07, 29 நவம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer/2011&oldid=1284350" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Info-farmer/2011".