காகம்(பெ)

காக்கை,இந்தியா.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
காகம்
மொழிபெயர்ப்புகள்
தொகு

பயன்பாடு

காகம் திட்டி மாடு சாகாது - (பழமொழி)
காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும் -(பழமொழி)
கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காக்கா -(பழமொழி)
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? -(பழமொழி)
காகம் கரைந்துண்ணும் -{{சிறியது|(பழமொழி)]]
விளக்கம்

ஒற்றுமைக்கும்,கூடிவாழ்தலுக்கும்,பகிர்ந்துண்ணுதலுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பறவையினம். ஊர் வீதிகளில் கிடக்கும் அசுத்தங்களை (எச்சில், கோழை, இறந்த பிராணிகள் மற்ற பாழ்பட்ட உணவுப்பொருள்கள் முதலியன) உண்டு சுத்தம் செய்வதால் 'ஆகாயத்தோட்டி' எனப்படுகிறது.இந்து மதத்தில் இறந்தவர்களின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. இறந்தவர்களுடைய நினைவு நாட்களின்போது படைக்கப்படும் உணவை தின்ன காகத்தின் வரவு பெரிதும் எதிர்பார்க்கப்படும். வைதீக குடும்பங்களில் முதலில் காக்கைக்கு சோறு போட்டபின்னர்தான் வீட்டிலுள்ளோருக்கு உணவு.

(இலக்கியப் பயன்பாடு)

தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோ டோர் காகம்
னவன்னமுற வீற்றிருந்து வானைமுத்த மிட்டதுவே. - காலைப்பொழுது, (பாரதியார்)


( மொழிகள் )

சான்றுகள் ---காகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

 :* (அண்டங்காக்கை)

"https://ta.wiktionary.org/w/index.php?title=காகம்&oldid=1988617" இலிருந்து மீள்விக்கப்பட்டது