வரவேற்புரை தொகு

 
 

வாங்க! மு.இளங்கோவன்

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
 
த*உழவன் 01:18, 18 பெப்ரவரி 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

 முனைவர் மு. இளங்கோவன்! உங்கள் நேரத்தையும் அறிவுவளத்தையும் விக்சனரிக்கு அளிப்பது குறித்து மிகவும் மகிழ்கின்றேன். நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஒரு பகுதியை விக்சனரி, விக்கிப்பீடியா, விக்கி மேற்கோள்கள் போன்ற திட்டங்களுக்கு அளிப்பதன் மூலம் தமிழ்ப்பணி ஆற்ற முடியும் என்ற எண்ணம் எனக்கு. எனக்குத் தமிழார்வம் இருப்பினும், தமிழில் வல்லமை கிடையாது; எனவே உங்கள் வருகை மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. நன்றி. --பரிதிமதி 02:30, 19 பெப்ரவரி 2010 (UTC)

மகிழ்ச்சியுரை தொகு

  1. உங்களது நேரத்தை இங்கும் செலவிடுவதற்கு மகிழ்கிறேன். உங்களைப் போன்றவர் தொடர்ந்து வரவேண்டும்.
  2. தமிழுக்காக உழைக்கும் என்னைப் போன்ற பதிவனுக்கு, உங்களைப் போன்ற அறிஞரின் அறிவும், ஆதரவும்தேவை.
  3. நீங்கள் இங்கிருக்கும் நன்னாளில், தமிழில் தானியங்கிப் பதிவேற்றம் (user:TamilBOT) ஆரம்பமாகியுள்ளது.
  4. தமிழ் பதிவேற்றத்திற்குரிய குறிப்புகளை, தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பலரோடு கூடி தமிழ் சொல்லின் வடிவமைப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. அதுவரை பதிவு நுட்பங்களைப் பற்றி என்னிடம் கேட்கவும். மின்மடல் அனுப்பவும். அல்லது இப்பக்கத்திலேயே கேட்கவும். எனக்குத் தெரிந்ததை அறிமுகப் படுத்துகிறேன். தெரியாததைக் கேட்டுச் சொல்கிறேன். பல வேளைகளில், சிறிது காலதாமதம் ஆகும். என்னைப் பொறுத்தருளவும். நன்றி. .த*உழவன் 01:59, 18 பெப்ரவரி 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

வருக, வருக தொகு

உங்களைப் போன்ற ஒரு முனைவரின் வருகை என்னைப் போன்ற வெறும் ஆர்வத்தால் மட்டுமே தமிழுக்குப் பங்களிக்க முனைவோரை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும். உங்கள் தொடர்ந்த பங்களிப்பின் மூலம் விக்சனரியும் தமிழும் மேலும் வளம்பெறும், மெருகேறும். (உங்கள் தளத்தில் உங்கள் தமிழ்ப்பணிகளைப் பார்த்துப் பிரமித்தேன். அதில். கவிஞர் சிற்பியின் படம் கண்டதும் அவரிடம் ஈராண்டுகள் (இரு அரையாண்டுகள்) பலப்பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் தமிழ் கற்றதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தேன்). நன்றி பழ.கந்தசாமி 03:31, 19 பெப்ரவரி 2010 (UTC)