Mariano Anto Bruno Mascarenhas
வருக,Mariano Anto Bruno Mascarenhas!
விக்சனரிக்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒரு முறை பார்க்கவும்:
- புதுப் பயனர் பக்கம்
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்--Trengarasu 05:06, 25 மார்ச் 2008 (UTC)
வருக
தொகுவருக புருனோ. முன்பு விக்கிப்பீடியாவில் உங்களைக் கண்டே மகிழ்ந்திருந்தேன். உங்களைப் போன்றும் தமிழும் துறைசார் அறிவும் கைவரப்பெற்றவர்கள் இன்னும் நிறைய பங்களிக்க இயன்றால் நன்றாக இருக்கும்--ரவி 10:19, 28 மார்ச் 2008 (UTC)
குறிப்புகள்
தொகுபுருனோ, விடம் என்ற சொல்லின் புழக்கம் குறித்து அறிந்திருந்தேன். இன்று சேர்க்க நினைத்து இருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள் :) புதிய பக்கங்களை உருவாக்க Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தைப் பயன்படுத்துங்கள். விக்சனரி நடைமுறை குறித்து சில விசயங்கள்: தமிழோ வடமொழியோ நாம் எந்த சொல்லையும் ஒதுக்குவதில்லை. ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பக்கங்கள் உண்டு. ஏனெனில், இது எம்மொழிச் சொல்லாக இருந்தாலும் பொருள் அறிய விரும்புபவர்கள் உண்டு. எனவே, விசம், விஷம், விடம் ஆகியவற்றுக்குத் தனித்தனிப் பக்கங்கள் உண்டு. ஆனால், பக்கங்களில் பொருள் விளக்கம் தரும்போது நல்ல தமிழ் / தூய தமிழ் என்று உறுதியாகத் தெரிந்த சொற்களைக் கொண்டு மட்டுமே விளக்கம் தருகிறோம். இதனால் நல்ல தமிழ்ச் சொற்கள் புழக்கத்துக்கு வருவதோடு பொருள் தேடிய சொல் தமிழல்ல என்றும் தெரிந்து கொள்ள இயலும். எனவே, விசம் என்ற சொல்லுக்கு நஞ்சு என்று பொருள் மட்டுமே போதும். கூடவே, விடம் என்றும் எழுத வேணடாம். ஏனெனில் விடம் என்பது தமிழ்ச் சொல்லா இல்லை வருசத்தை வருடம் என்று எழுதுவது போல் விசத்தை விடம் என்று எழுதியதா என்று தெளிவில்லை. --ரவி 13:51, 2 ஏப்ரில் 2008 (UTC)
விடம்
தொகுவிடம், விசம் - இரண்டுமே புழக்கத்தில் உள்ள வழக்குகள் என்பதால் தனித்தனிப் பக்கங்கள் இருக்கட்டும். விஷம் சொல்லை மட்டும் கிரந்தப் பயன்பாடைத் தவிர்க்கும் பொருட்டு விசம் பக்கத்துக்கு வழிமாற்றலாம். கொஞ்சம் குழப்புறேனோ :) --ரவி 12:22, 3 ஏப்ரில் 2008 (UTC)
விக்கிப்பீடியா
தொகுபுருனோ, நீங்கள் அப்படியே கொஞ்சம் தமிழ் விக்கிப்பீடியா பக்கமும் வந்து உதவலாமே! உங்கள் துறையாகிய மருத்துவத்தில் எழுத நிறைய உள்ளது. அங்கு ஆளும் சொற்களுக்கு இங்கு பொருளும் இடலாம். --செல்வா 19:38, 5 ஏப்ரில் 2008 (UTC)
- நீங்கள், "தமிழ் விக்கிப்பீடியாவில் அடுத்த மாதம் முதல் தினம் ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். தங்களின் கருத்திற்கு நன்றி " என்று நீங்கள் எழுதியிருந்ததைப் பார்த்து மகிழ்ந்தேன். நன்றி.--செல்வா 02:53, 6 ஏப்ரில் 2008 (UTC)
மீண்டும் வருக!
தொகுவாருங்கள் புருனோ! உங்களை மீண்டும் இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. மருத்துவர்கள் குழு பெரிதாகி வருகின்றது என்பது மகிழ்ச்சி அளிப்பது. --செல்வா 19:46, 24 செப்டெம்பர் 2010 (UTC)
படங்கள்
தொகுநீங்கள் கடைசியாக உருவாக்கிய சொற்களில் இட்ட படங்கள் பொருந்துமா?--த*உழவன் 01:13, 5 ஜனவரி 2011 (UTC)
- 1 http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Confocal_microscope_S.jpg பொருந்தவில்லை என்று நினைக்கிறேன்
- 2 இது தான் http://www.gadgetmadness.com/archives/military_zoom_binoculars.jpg இருவிழி தொழிநோக்கி புருனோ 09:44, 20 சனவரி 2011 (UTC)
- நன்றி. அப்படத்தை நீக்கி விட்டேன்.--த*உழவன் 01:33, 21 சனவரி 2011 (UTC)
What you have given in Binocular Telescope
Binocular Microscope is different from binocular telescope புருனோ 12:09, 27 செப்டெம்பர் 2011 (UTC)
Invite to WikiConference India 2011
தொகு
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Mariano Anto Bruno Mascarenhas,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
அகயிணைப்பு
தொகுநீங்கள் பல்வேறு பணிகளுக்கும் இடையில் தொடர்ந்து, தமிழ் விக்சனரியில் பங்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.அப்படி செயல்படும் போது, நீங்கள் தமிழில் விளக்கம் தரும்போது, அதில் முக்கியமானச் சொற்களை அகயிணைப்புத் தந்தால் தான்((எ. கா.) - massager), மொத்த எண்ணிக்கைக்கூடும். நீங்கள் அடுத்தமுறை வரும்போது, நீங்கள் கடைசியாகச் செய்த சொல்லினை ஒருமுறைப் பார்க்கவும்.அதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அம்மாற்றங்களையும் முடிந்தால், உங்கள் மறுபதிவில் இணைத்திடக் கோருகிறேன்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 13:19, 8 ஆகத்து 2012 (UTC)
- இனிமேல் கண்டிப்பாக செய்கிறேன்
பொதுவாக வீட்டில் இருந்து புதிய சொற்களை செய்யும் போது இணைப்பது வழக்கம் வெளியில் இருந்து என்றால் சிறிது சோம்பல் .
புருனோ (பேச்சு) 14:14, 8 ஆகத்து 2012 (UTC)
- குறைந்த நேரத்தில் சிறப்பாக பங்களித்தல் இயலும். அதற்கு ஒரு அட்டவணைச்செயலியில்(spread sheet) உங்கள் ஆக்கங்களைக் குறித்து வையுங்கள். அதாவது, ஒரு கட்டத்தில் தலைப்பு(A), அதற்கு அடுத்தக்கட்டத்தில் அதன்பொருள்(B), அதற்கடுத்த பொருள் அடுத்தகட்டத்தில்(C) என கிடைமட்ட வரிசையில் அமைக்க வேண்டும். பின்பு, அவற்றை அரைத்தானியக்க(semi-automatic) முறையில் ஒரு நிமிடத்திற்கு ,10சொற்கள் என பதிவேற்றலாம்.இது போன்ற முறைகள் என்னைப் போன்ற எழுத்தனுக்கு உரியது.
- உங்களைப்போன்ற துறைச்சார்ந்த அறிவை, இங்கு சேகரிக்க விரும்புகிறேன். அத்திறன் உங்களைப் போன்றவர்களால் மட்டுமே இயலும்.என்றும் தமிழுக்காக இணைவோம். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 14:38, 8 ஆகத்து 2012 (UTC)
படிவம்
தொகுதொகுத்தல் சாளரத்தின் கீழே, புதிய சொற்களைச் சேர்க்க வார்ப்புருக்கள் உள்ளன. பயன்படுத்தி, அதுபற்றி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- {{subst:noun-ta|மொழிபெயர்ப்பு|தமிழ்விளக்கம்}} - குறிப்பு: முதலில் மொழிபெயர்ப்பு, அடுத்து ஒரு pipeline |அதற்கு அடுத்து தமிழ் விளக்கம்
- {{subst:noun|தமிழ்விளக்கம்}}
- {{subst:verb|தமிழ்விளக்கம்}}
வணக்கம்--த♥ உழவன் +உரை.. 03:54, 4 அக்டோபர் 2013 (UTC)
மேலும்...
தொகு- ஒரு சொல் அல்லது கூட்டுச் சொற்களுக்கு மட்டுமே [[ .....]] அக இணைப்பு(internal links) தருக.
- அனைத்து ஆங்கில எழுத்துக்களும், கீழ் எழுத்துக்களில்(lower case) தொடங்கப்பட வேண்டும். விதிவிலக்குகள் மிக அரிது. ஆனால், உண்டு. இவ்விதி அனைத்து விக்சனரி திட்டங்களிலும் பின்பற்றப்படுகிறது.
- நானும், பழ.கந்தசாமியும் மருத்துவம்: என்று உட்பக்கத்தில் குறிப்பிடுவதில்லை. மாறாக, அதனை பகுப்பாக மாற்றி விடுகிறோம். ஏனெனில், சில சொற்களின் அர்த்தங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட துறைகளில் வருகின்றன. மேலும், மொழிபெயர்ப்பை நகலெடுப்போருக்கு, அதனை நீக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. அவர்களது பணியடர்வைக் குறைக்கவும், இவ்வாறு பகுப்பாக மாற்றி விடுகிறோம்.
புதியன உருவாக்குதல்
தொகு//ஆங்கிலச் சொற்களை எழுதும்போது, முதல்எழுத்து உட்பட அனைத்து எழுத்துக்களையும் சிறிய எழுத்துக்களில் (lower case) எழுதுங்கள்.// என்ற விதியை பின்பற்றுமாறு, இரவி எனக்கு வழிகாட்டியமையால், இதுவரை பின்பற்றுகிறேன். Autodirectவசதி ஆங்கில விக்சனரியில் உள்ளது. அதனை இங்கு கொணர, இந்த இடத்தில் முயற்சி எடுக்கப்படுகிறது. எனவே, நீங்களும் பின்பற்றக் கோருகிறேன்.(எ. கா.) multi ஏற்கனவே உள்ளது. எனவே, Multi நீக்கப்பட உள்ளது. இதுகுறித்த உங்களின் எண்ணம் அறிய ஆவல்.
- நீங்கள் உருவாக்கும் சொல் தமிழ் சொல்லாக இருந்தால், கீழுள்ள வார்ப்புருக்கள் பகுதியிலுள்ள {{subst:noun-ta||}} என்பதைப் பயன்படுத்தவும்.{{subst:noun-ta|ஆங்கிலவிளக்கம்|தமிழ்விளக்கம்}} என்று அமையுமாறு உருவாக்கவும்.
- நீங்கள் உருவாக்கும் சொல் தமிழல்லாத சொல் என்றால், {{subst:noun||}} என்ற வார்ப்புருவில், {{subst:noun|மொழிகுறியீடு|தமிழ்விளக்கம்}} என உருவாக்கவும்.
- ஆங்கிலச்சொல்லாக இருந்தால்,மொழிக்குறியீடு en-->{{subst:noun|en|தமிழ்விளக்கம்}}
- இந்தியாக இருந்தால்,மொழிக்குறியீடு hi -->{{subst:noun|hi|தமிழ்விளக்கம்}}
உரிய விளக்கம் எழுதி, முன்தோற்றம் காணும் போது, உரிய மொழிக்கான படிவத்துடன், உங்கள் விளக்கம் தெரியும். பிறகு, பக்கத்தினைச் சேமிக்கவும். எனவே, இதனை நாம் அனைவரும் பின்பற்றலாம் என்று கருதுகிறேன்.வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:28, 7 ஏப்ரல் 2014 (UTC)
எனது தப்பினால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும் இனி மேல் கவனமாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன் புருனோ (பேச்சு) 05:07, 23 மே 2014 (UTC)
- Multi நீக்கப்பட்டது. ஈனில் மகிழ்ச்சியைத் தந்தது. மேம்படுத்தியுள்ளேன். மகப்பேறு இல்லத்திற்கான தமிழக படம் கிடைக்காததால் அயல்நாட்டு படமொன்றினை இணைத்துள்ளேன். நீங்கள் மருத்துவத்துறை என்பதால், பல படங்களை பொதுவகத்திற்கு கொடையளிக்க வேண்டுகிறேன். பல படங்களை தானியக்க முறையிலும் அங்கு சேர்க்கலாம். உங்களுக்கு தேவையெனின், 10 படங்கள் கையிருப்பில் வைத்துக் கொண்டு , என்பக்கத்தில் தொடர்பு கொள்ளவும். தெரிவிக்கிறேன். வணக்கம்.
படிவங்கள் இட
தொகு- படிவங்கள் இடக்கோருகிறேன். சொற்தொகுதிகளாக தயவுசெய்து வேண்டாம். ஏனெனில் இதுவரை யாரும் அதுபோல செய்ததில்லை. பலவித படிவங்கள் இங்கு கையாளப்பட்டுள்ளன. உங்களின் எண்ணம் மாறுபடின், உரிய படிவத்தை பரிந்துரைக்கவும். எனது எண்ணுக்கு அழைத்தால், உங்கள் வினாக்களுக்கு விளக்க அளிக்கிறேன். எனது எண் 90 95 34 33 42 .வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 07:17, 21 சூன் 2014 (UTC)
- Did not understand. Please explain புருனோ (பேச்சு) 18:49, 22 சூன் 2014 (UTC)
- அம்மா என்ற சொல்லைப் பார்க்கவும். அது இதுவரை பிறருடன் நான் நடத்திய உரையாடல்கள், அனுபவங்களின் அடிப்படையில், விக்சனரியின் வேகமான வளர்ச்சிக்காக, பல்வேறு தேவைகளைக் கணக்கில் கொண்டு, அப்பக்கத்தினை ஒருங்கிணைத்து உள்ளேன். இந்த அடிப்படையிலேயே, தற்போது புதுதமிழ் சொற்களைப் பதிவேற்றுகிறேன். எனவே, உங்களின் எண்ணத்தையும் அதன் பேச்சுப்பக்கத்தில் பதிவு செய்யக் கோருகிறேன். ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 03:20, 24 சூன் 2014 (UTC)
- புரிகிறது. மாற்றி விடுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் 12:06, 25 சூன் 2014 (UTC)
கூகுள் ஆவண வழி பதிவேற்றல் உதவி
தொகுபல மருத்துவத் தொடர்புடைய சொற்களை, பதிவேற்றுவதில் மகிழ்ச்சி. உங்கள் பணியடர்விலும், தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றமைக்கு தலைவணங்குகிறேன். ஒரு வேண்டுகோள். ஒவ்வொரு சொல்லும் படிவத்துடன் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். எந்த ஒரு சொல்லும் படிவமில்லாமல், எந்த ஒரு மொழி விக்சனரியிலும் இல்லை. நீங்கள் கூகுள் ஆவண (spreadsheet) அட்டவணைச் செயலியில் குறித்து, எமக்கு பகிர்ந்தால், அதனை உரிய படிவத்துடன், உங்கள் பெயரிலேயே பதிவேற்றிட இயலும். அதாவது கூகுள் ஆவணத்தின், column-A என்பதில் தலைப்புச்சொல், column-B என்பதில் மொழிபெயர்ப்பு என முதலில் உருவாக்க வேண்டும். அதனை உரிய படிவத்துடன் பதிவேற்றுவது எளிது. உங்களுக்கும் நேரம் மீதமாகும். எனவே, இதுபற்றி உங்கள் எண்ணமறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு) 01:16, 16 சூலை 2014 (UTC)
w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க
தொகுஇந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- த♥உழவன்+உரை.. 01:45, 11 சூலை 2015 (UTC)
Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey
தொகு(Sorry to write in Engilsh)
Hello! This is a final reminder that the Wikimedia Foundation survey will close on 28 February, 2017 (23:59 UTC). The survey is available in various languages and will take between 20 and 40 minutes. Take the survey now.
If you already took the survey - thank you! We won't bother you again.
About this survey: You can find more information about this project here or you can read the frequently asked questions. This survey is hosted by a third-party service and governed by this privacy statement. If you need additional help, or if you wish to opt-out of future communications about this survey, send an email through EmailUser function to User:EGalvez (WMF) or surveys@wikimedia.org. About the Wikimedia Foundation: The Wikimedia Foundation supports you by working on the software and technology to keep the sites fast, secure, and accessible, as well as supports Wikimedia programs and initiatives to expand access and support free knowledge globally. Thank you! --EGalvez (WMF) (talk) 08:23, 24 பெப்ரவரி 2017 (UTC)
மகிழ்ச்சி
தொகுவணக்கம். நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பதிவுகளைக் காண்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இப்பொழுது விக்கிமூலம் என்ற கட்டற்ற நூலகத் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன்.--த♥உழவன் (உரை) 02:53, 4 சூன் 2021 (UTC)