அம்மா
தமிழ்
|
---|
(கோப்பு) |
பொருள்
- அம்மா, பெயர்ச்சொல்.
- தாயை குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- (எ. கா.) அம்மாவைப் பேணு.
- பெண்களை, பாசமாக அழைக்கவும், மரியாதையாக அழைப்பதற்குப் பயனாகும் சொல்.
- (எ. கா.) தங்கையைப் பார்த்து, அம்மா இங்கே வா என்று அழைப்பர்.
- அம்மா என்பது ஒரு கூட்டுச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது.
- (எ. கா.) அம்மா அரிவை.. திருக்குறள்-1107 - அழகிய மாமை நிறம் உடைய அரிவை.
- அம்மா என்பது இடைச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது.
- ஒரு வியப்பு இடைச்சொல்லாக வருவதுண்டு.
- (எ. கா.) அம்மா! எவ்வளவு பெரிய யானை
- அதிசய இரக்கக்குறிப்பு
- ஒர் மகிழ்ச்சி/உவப்புக் குறிப்பு
- ஓர் அசைச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது. (பாரத. இராசசூ. 91.)
விளக்கம்
- பகுபதம்: அம் + ம் + ஆ
மொழிபெயர்ப்புகள்
இந்திய மொழிகள்
மொழிபெயர்ப்புகளைக்
|
உலக மொழிகள்
இலக்கிய மேற்கோள்கள்
- கந்தபுராணம் : அணங்குறு நிலைய வாகி அடுத்தன நடுவண் அம்மா
- கம்பராமாயணம் : போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந்தவமாய்ப் போயிற்று, அம்மா!
- சிலப்பதிகாரம் : அம்மாமி தன் வீவும் கேட்டாயோ தோழீ
- சிலப்பதிகாரம் : தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண் அம்மானை
- சீவக சிந்தாமணி : நட்டு விட்டு ஒழியும் ஆயின் நன்மையார் கண்ணது அம்மா
- திருக்குற்றாலம் பாடல்கள் : அம்மாவென் மேனி யடங்கலு மேகறுத் தேனே.
- திருமந்திரம் : வருத்தினும் அம்மா வழி நடவாதே.
- திருவாசகம் : அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
- தேம்பாவணி : திரு வரும் ஆக்கை நீக்கி, தெள் உயிர், போயிற்று, அம்மா!
- தேவாரம் : அம்மா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
- நாலடியார் : உறப் புணர்க அம்மா என் நெஞ்சு
- பதினோராம் திருமுறை : முக்கூடல் அம்மா முருகமருங் கொன்றையந்தார்
- பாரதியார் : வேண்டுமடி எப்போதும் விடுதலை,அம்மா
- பெரியபுராணம் : அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா
- வில்லிபாரதம் : அத்தன் அத் தூண் அளித்தருள, தழுவி நெரித்தனன்; துகள்கள் ஆயது அம்மா!
ஒத்த சொற்கள்
பிற வடிவங்கள்
- வேற்றுமையுருபுகளால் மாறக்கூடியன.
- அம்மா + ஐ = அம்மாவை
- அம்மா + ஆல் = அம்மாவால்
- அம்மா + கு = அம்மாவுக்கு
- அம்மா + அது = அம்மாவது
- அம்மா + இலிருந்து = அம்மாவிலிருந்து
- அம்மா + ஓடு = அம்மாவோடு
- அம்மா + இன் = அம்மாவின்
சொல்வளம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + indo wordnet +த. இ. க. க. அகரமுதலிகள்