பழங்கதை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பழங்கதை ,
- பழைய கதை; பூர்வசரிதம்
- மறந்துபோன பழைய நிகழ்வு/செய்தி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒருவர் நெடுங்காலத்திற்கு முன்பே சொன்ன அல்லது எழுதிய கதை பழங்கதை; அங்ஙனமன்றி, புதிதாகச் சொல்லப்படும் அல்லது எழுதப்படும் கதை புதுக்கதை. (கதை வரைவு (Story Writing) - முன்னுரைக் குறிப்புகள், தமிழ் இணையக் கல்விக்கழகம்)
- சமநீதி என்பதெல்லாம் பழங்கதை; நிகழ்காலத்தை நீஙகள் உணர்வது நல்லது (நகலாக்கம், வே. வெங்கடரமணன் , திண்ணை)
- புற்றுநோய்க்கு மருந்தே இல்லை என்றதெல்லாம் பழங்கதை. கீமோதெரபி முதற்கொண்டு நவீன சிகிச்சைகள் அனைத்தும் நம் ஊரிலேயே கிடைக்கின்றன. (புற்றுநோய்க்கு எதிரான போர்..!, இளமைக் கச்சேரி, விகடன்)
- மகாபாரதம், தர்மம் மற்றும் அதர்மத்தை விளக்கும் ஒரு பழங்கதை. இன்றைய காலத்தில் தர்மம் மற்றும் அதர்மத்தை மீண்டும் பேசி,மறுபரிசீலனை செய்ய ஒரு புதிய கதையாக நான் கடவுள் ஒரு விவாத மேடையை அமைத்துக் கொடுத்துள்ளது (நான் கடவுள் - உலகப் பார்வையில், ராமப்ரசாத் , திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை? (மனோன்மணீயம், சுந்தரம் பிள்ளை, மதுரைத் திட்டம்)
- சொற்பொழி வென்று சொல்லவந் தாலும் 'பண்டிதர்' பேச்சுப் பழங்கதை யாகவே (நாமக்கல் கவிஞர், இராமலிங்கம் பிள்ளை பாடல்கள், மதுரைத் திட்டம்)
- பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே (பாரதியார்)
- மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை (பாரதியார்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பழங்கதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +