பொருட்பெயர்
பொருள்
பொருட்பெயர்
- பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல்
- ஒரு பொருளுக்குஉரிய பெயர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை (உறுப்பு), குணம், தொழில் என அறுவகைப்படும்.
- ஏடு, எழுதுகோல், உணவு - பொருட்பெயர்
- சென்னை, மதுரை, வீடு - இடப்பெயர்
- காலை, மாலை, ஆவணி - காலப் பெயர்
- இலை, கிளை, கழுத்து - சினைப் பெயர்
- செம்மை, பசுமை, நன்மை - பண்புப் பெயர்
- ஆடல், பாடல், முயற்சி - தொழிற் பெயர் (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 3 ஏப்ரல் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொருட்பெயர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +