மந்தணம்
மந்தணம் (உ)
பொருள்
- பொதுவில், வெளியில் அனைவராலும் அறியப்படாத ஒன்று, இரகசியம்.
- மந்திரம்
மொழிபெயர்ப்புகள்
- secret ஆங்கிலம்
விளக்கம்
- மந்தம் என்றால் மெதுவாக, மெள்ள வளர்வது அல்லது நகர்வதைக் குறிக்கும். இங்கு செய்தி கமுக்கமாக வைத்திருப்பதால் விரைவாகப் பரவாமை பற்றி மந்தணம் என்று ஆகியதாகலாம். இதனுடன் தொடர்புடைய சொல் மந்தரன் = ஒற்றன், தோழன்.
பயன்பாடு
- உலகின் மிகச்சிறந்த ஜனநாயக அரசிலும்கூட அரசாங்க நிகழ்வுகளின் பெரும்பகுதி ரகசியங்களால் ஆனதே. ஒரு தாலுகா அலுவலகத்தில்கூட அங்கே வரும் கடிதங்களில் கணிசமானவை மந்தணம் என்று முத்திரையிடப்பட்டவையாக இருக்கும். நிர்வாகம் என்றும் ரகசியங்களால் ஆனது. அது ரகசியமாக இருக்கும்தோறும் அரசைக் கையாளும் தரப்பு வலிமையுடன் இருக்கிறது. ரகசியம் அழியும்தோறும் மக்கள் தரப்பு வலிமையடைகிறது. (விக்கிலீக்ஸும் நீரா ராடியாவும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மந்தணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974