மன்பதை
மன்பதை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- மன்பதை மக்களினம். மக்களுள் உலகப் படைப்புப் பற்றி எடுத்துரைக்கும் புராணிகர்களை இங்கே “மன்பதை” என்று குறிக்கின்றார். திருவருட்பா 3995 உரை
- பலமுறை படித்திருப்பினும், படிக்கப் படிக்கப் புதிது புதிதாய் அறிவு கொளுத்தும் "அர்த்தமுள்ள இந்து மத"த்தை, சனிக்கிழமைதோறும் தினத்தந்தியில் என் கண்கள் தேடும்! கண்ணதாசன் இந்த மன்பதைக்கு வழங்கிய கருணைக் கொடை அது! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 28-செப்டம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
- மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
மன்னுருத் திரர்களே முதலா (திருவருட்பா 3995)
- யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; (சிலப்பதிகாரம், வழக்குரை காதை 75-77)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மன்பதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974