பரப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரப்பு(பெ)
- கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
- ஏதொன்றும் பரவுதல் அளவைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
- உலகம்
- விரிவின், பெருக்கத்தின் பருவளவைக் குறிப்பது
- ஏதொன்றின் வீச்சு, செல்லும் எல்லை.
- பயிர்கள் போன்றவற்றின் விளைச்சல் விரிவு.
- கடல் (பரந்திருப்பதால்; பரவை என்றும் கூறப்படும்)
- மேல்தளம்
- நுழைவாயில் போன்றவற்றில், கதவுக்கு மேலே நிலைக்காலின் இருபகுதியையும் இணைக்கும் முகவணை, அல்லது மண்தாங்கிக் சட்டம் அல்லது கல்.
- படுக்கை
- கடவுளுக்கு முன் விரித்துப் பரப்பி வைத்துப் படைக்கும் அரிசி முதலான உணவுப் பயிர்கள் அல்லது உணவு.
மொழிபெயர்ப்புகள்
- expanse, extension, space, surface, area - இடவிரிவு. நன்பெரும் பரப்பின் விசும்பு (பதிற்றுப்பத்து- 17, 12)
- diffused or extended state of a being, corporeal or incorporeal; diffusion; overspreading - வியாபகம். படரொளிப் பரப்பே (திருவாசகம்- 22, 8)
- world - உலகம். பரப்பினடுப் படுவதொரு மேருகிரி (கோயிற் பு. வியாக். 6)
- multiplicity, variety of forms - மிகுதி
- mass - தொகுதி. படர்சடைப் பரப் பும் (கோயிற்பு. நடராச. 33)
- range, compass, extent of a subject - அளவு.
- land measure, of two kinds, viz., neṟ-parappu, nilai-p-parappu - நெற்பரப்பு, நிலைப்பரப்பு என்றிரு வகையான நிலவளவு.
- sea; ocean - கடல்
- ceiling - முகடு
- lintel - கதவுநிலையின் மேலுள்ள மண்தாங்கிப்பலகை.
- bed, couch - படுக்கை
- food of various kinds or rice placed before a deity in receptacles of the capacity of a kuruṇi - பரப்பரிசி
விளக்கம்
பயன்பாடு
பரப்பு (வி)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- spread, as grain; lay out, as goods; diffuse, as odour - பரவச்செய் தல். நிதி பரப்பி (திருவாசகம் -8, 3)
- disseminate, as news; propagate, as opinions - செய்தி முதலியன பரப்புதல்
- distend; expand, as wings - விரித்தல். காலைப் பரப்பி நின்றான்
- place confusedly, as books on a table; ஒழுங் கின்றி வைத்தல். எல்லாம் பரப்பிக் கிடக்கின்றன.
- establish - நிலைபெறுத்தல். நான்மறையோர் புகழ்பரப்பியும்(பட்டினப். 202.6)
- give lavishly - பெருகக்கொடுத்தல். பெத்த முத்தியும் பரப்பு பெண்ணரசி (விநாயகபு. 2, 7)
விளக்கம்
பயன்பாடு
ஆதாரங்கள் ---பரப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +