(வாக்கியப் பயன்பாடு)

மாக்கோலம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - மாக்கோலம்
  1. (நீர் சேர்த்த) அரிசிமாவால் பூமியிலிடும் சித்திரங்கள்
  2. தரை, சுவர் முதலியவற்றில் மாக்கொண்டு வரையப்படும் கோடுகள், சித்திரங்கள் கோலம்
மொழிபெயர்ப்புகள்
  1. decorative drawings on the floor with rice flour (mixed with water)
  2. lines or figures, made on a floor, wall, sacrificial pot, &c., ornamental devices
விளக்கம்
  • அரிசிமாவினால் இடப்படும் கோலமே தமிழக மரபுவழிக் கோலமாகும்...சுண்ணாம்புக்கற்பொடிக் கோலங்களும், பல்வகை நிறப்பொடிக் கோலங்களும் பின்னால் பழக்கத்தில் வந்தவையே...காலையில் போடப்படும் அரிசிமாவுக் கோலத்தால் கணக்கற்ற எறும்புப் போன்ற உயிரினங்களுக்கு உணவு அளித்துவிட்டுதான் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளைத் தொடங்குவர்...அன்றாடம் இடும் கோலங்களை வெறும் அரிசி மாவினாலும், பண்டிகை மற்றும் விசேடநாட்களில் இடும் கோலங்களை அரிசி மாவோடு நீர் சேர்த்துக்கரைத்து ஒரு சிறு துணித்துண்டை அதில் நனைத்து எடுத்து விரல்களினிடையே வைத்துப் பிழிந்து கோலமிடுவர்...இந்த விசேட கோலத்திற்கு இழைக்கோலம் என்று பெயர்...நூலைப்போல் தரையில் இழைத்துப் போடப்படுவதால் இழைக்கோலம் ஆனது.
  • மாக்கோலம் = மா + கோலம்

(இலக்கியப் பயன்பாடு)

  • மணக்கோலம் கொண்ட மகளே புது மாக்கோலம் போடு மயிலே (பாடல்)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாக்கோலம்&oldid=1194003" இலிருந்து மீள்விக்கப்பட்டது