யதார்த்தவாதம்


பொருள்

யதார்த்தவாதம்(பெ)

  • என்ன நடந்ததோ அதை நடந்தது மாதிரியே சொல்வதே யதார்த்தவாதம்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
விளக்கம்
  • இலக்கிய எழுத்துக்குப் பல அழகியல் வகைமாதிரிகள் உண்டு. பொதுவாக நாமெல்லாம் வாசிப்பது யதார்த்தவாதத்தைத்தான் (realism) என்ன நடந்ததோ அதை நடந்தது மாதிரியே சொல்வதே யதார்த்தவாதம். ஆனால் அதில் கதையை ஆர்வமூட்டும்படி சொல்லக்கூடிய, கதையின் மையத்தை உருவாக்கக் கூடிய, கதையைத் தொகுத்துத் தரக்கூடிய ஆசிரியன் இருந்துகொண்டே இருப்பான். நம்முடைய பொழுதுபோக்குக் கதைகள் பெரும்பாலும் யதார்த்தவாதம் சார்ந்தவை. ஆகவே இந்தவகை எழுத்தை நாம் சிரமம் இல்லாமல் புரிந்துகொள்கிறோம். இந்த இணையதளத்தில் உள்ள அனல்காற்று, ஊமைச்செந்நாய் ,மத்தகம் போன்ற கதைகள் யதார்த்தவாதக் கதைகள். தல்ஸ்தோய், அசோகமித்திரன் போன்றவர்கள் யதார்த்தவாத எழுத்தாளர்கள்.
  • யதார்த்தவாதத்தில் உள்ள ஆசிரியனின் பங்கேற்பைத் தவிர்த்துவிட்டால் அதுவே இயல்புவாதம் (naturalism) . இதில் கதை "அதன்போக்கில்" விடப்படுகிரது. புறவுலகம் ஒரு புகைப்படக்கருவியில் தெரிவதுபோலப் பதிவாக்கப்படுகிறது. அக ஓட்டங்கள் அப்படியே சொல்லப்படுகின்றன. எதுவும் விளக்கப்படுவதில்லை. மையப்படுத்தப்படுவதில்லை. சுருக்கப்படுவதில்லை. (பூமணியின் அழகியல், ஜெயமோகன்)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---யதார்த்தவாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இயல்புவாதம், யதார்த்தம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=யதார்த்தவாதம்&oldid=1032959" இலிருந்து மீள்விக்கப்பட்டது