யானைக்கால்
யானைக்கால் (பெ)
பொருள்
- யானையின் கால்
- யானைக்கால் நோய் என்னும் ஒரு நோய். இது ஃபைலேரியா (Filaria) என்னும் நுண்புழுவாலும் அதன் உடலின் உள்ளே உள்ள நுண்ணியிரியாலும் ஏற்படும் நோய். தோலுக்குக் கீழே உள்ள பகுதி மிகவும் தடிப்பாகிவிடும். கொசுக்களால் இவை மாந்தர்களுக்குப் பரவுகின்றது. இது காலைத் தவிர பிற பகுதிகளையும் கூடக் தாக்கும். ஆனால் பெரும்பாலும் கொழுநீர் மண்டலத்தின் (lymphatic system) வழியே காலைத் தாக்குவதால் கால் ஊதிப்பெருத்து யானையின் கால் போல் தோற்றம் தருவதால் யானைக்கால் நோய் எனப் பெயர் பெற்றது. படத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஓர் ஆணின் விரைப்பை (scrotum) ஊதிப் பெருத்து இருப்பதைப் பார்க்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +