ரஞ்சிதம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that which pleases, charms or delights
  2. that which is painted or drawn in colours
விளக்கம்
பயன்பாடு
  • மனோரஞ்சிதமான - மனதை மகிழ்விக்கும்
  • பார்க்கின்றவரது பார்வைக்கு இன்பந்தருகின்ற தோற்றமும் மாறாத மலர்ச்சியும் மனோரஞ்சிதமான அழகும் குளிர்ச்சியும் ஒளியும் பெற்றுச் செந்தாமரை மலர்போல் விளங்கும் முகமும் (மனு முறைகண்ட வாசகம்)
  • கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி (தாலாட்டுப் பாடல்)
  • மிஞ்சி போட்ட ரஞ்சிதமே மின்னவாடி பேசிப் போவோம்
பச்சை மணக்குதடி பாதகத்தி ஒம் மேல (நாட்டுபுறப் பாடல்)
  • அஞ்சுகிளி ரஞ்சிதமே
அனேககிளி சினேகிதமே
கொஞ்சும் கிளி ரத்தினத்தை-நான்
குத்தப்பட என்ன சொன்னேன்? (திருச்செந்தூர் பாலம், நாட்டுபுறப் பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • மிஞ்சுவ ளங்கள் நிறைந்து சுகங்கள்
மிதந்து கிடந்திட்ட தேசத்திலே
பஞ்சமும் கொள்ளைப் பலவகை நோய்களும்
மிஞ்சுவ தென்னடி ரஞ்சிதமே! (நாமக்கல் கவிஞர்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ரஞ்சிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இன்பம் - இரஞ்சிதம் - குஞ்சிதம் - பஞ்சிதம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரஞ்சிதம்&oldid=1996304" இலிருந்து மீள்விக்கப்பட்டது