வட்டித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வட்டித்தல், பெயர்ச்சொல்.
  1. வட்டமாதல் (யாழ். அக. )
  2. சுழலுதல்
    (எ. கா.) வட்டித்துப் புயலே றுரைஇய வியலிரு ணடுநாள் (அகநா. 218)
  3. பிரதிக்கினை பண்ணுதல்
    (எ. கா.) வட்டித்துவிட்டா ளெறிந்தாள் (சிலப். 21, 45)
  4. தாளவொற்றறுத்தல் (சூடாமணி நிகண்டு)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  5. தோள்புடைத்தல்
    (எ. கா.) செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் (பழ மொ. 326)
  6. சுழற்றுதல்
    (எ. கா.) மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து (புறநா. 42)
  7. உருட்டுதல்
    (எ. கா.) கழகத்துத் தவிராது வட்டிப்ப (கலித். 136)
  8. பரிமாறுதல் (W.)
  9. கட்டுதல்
    (எ. கா.) அலகில் மாலை யார்ப்பவட்டித்து (புறநா. 394)
  10. எழுதுதல் (சிலப். 21, 46, அரும்.)
  11. வளைத்தல் (இலக். அக.)
  12. கடிதல்
    (எ. கா.) அவன் என்னை வட்டித்தான் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be round in shape To revolve; to move round and round; to gyrate To swear; to take an oath ( Mus. ) To beat time To slap one's own shoulders, in defiance or challenge To whirl; to swing round To roll; to throw, as dice To serve, as an item of a meal To tie To write To bend To reprove, reprimand, censure


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டித்தல்&oldid=1343818" இலிருந்து மீள்விக்கப்பட்டது