வத்தக் குழம்பு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வத்தக் குழம்பு, பெயர்ச்சொல்.
- (வத்த+குழம்பு)
விளக்கம்
தொகு- தமிழ் நாட்டுக் குடும்பங்களில் பாரம்பரியமாகச் செய்யப்படும் குழம்பு வகைகளுள் ஒன்று...புளிச் சாறும், ஒரு வத்தல் வகையும் தலையாய உட்பொருட்கள்...சூடான சாதத்தில் இந்தக் குழம்போடு,சிறிது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து, சுட்ட அல்லது பொறித்த அப்பளாம் அல்லது வடாம் தொட்டுக்கொண்டு உண்ண மிகச்சுவையாக இருக்கும்...வத்தல் என்பது வற்றல் என்னும் சொல்லின் பேச்சுவழக்கு...பாகற்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், கொத்தவரைக்காய், சுண்டைக்காய், மணத்தக்களிக்காய், சுக்காங்காய் போன்ற காய்களை துண்டுகளாக நறுக்கி/சிறிய காய் வகைகளை அப்படியே, வெயிலில் சுக்காக உலர்த்தி வைத்துக்கொள்ளுவதையே வற்றல் (வத்தல்) போடுதல் என்பர்..உப்பிட்டு, வேகவைத்து, வெயிலில் உலர்த்தி செய்யும் வத்தல்வகைகளும் உள்ளன.பிறகு தேவைப்படும்போது வத்தக் குழம்பு காய்ச்சி உண்பர்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Thick soup made of tamarind pulp and any one of dried vegetables...One of traditional Kuzhambu varieties of TamilCountry...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +