பொருள்

வன்மை(பெ)

  1. வலிமை
  2. கடினம்
  3. வன்சொல்,கடுஞ்சொல்
  4. ஆற்றல்
  5. வன்முறை; வலாற்காரம்
  6. சொல்லழுத்தம்
  7. கோபம்
  8. கருத்து
  9. வல்லெழுத்து

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. strength
  2. hardness
  3. rude speech, harsh word
  4. skill, ability
  5. force, violence
  6. accent, emphasis
  7. anger
  8. thought
  9. attention
  10. (Gram.) hard consonant
பயன்பாடு
  • வன்மை என்பது வலிமையாகும். உடல் வன்மை வேண்டும் என்போம். சொல்வன்மை, அனைத்து வன்மையிலும் உயர்ந்தது என்று சொல்லுவோம். வன்மை, வலிமை, வல்லமை எல்லாம் ஒன்றே. வல்லரசு நாடுகள் என்றால் போர் வன்மை மிக்க நாடுகள் எனப் பொருளன்றோ?
  • வண்மை என்பது வளத்தைக் குறிப்பது. வழங்குதலையும் குறிக்கும். அஃதாவது வள்ளல் தன்மை வண்மை எனப்படும். "வறுமையின்மையால் வண்மையில்லை கோசலத்தில்' என்பான் கம்பன். (வண்மையில்லை நேர் வறுமையின்மையால்) வன்மையும் வண்மையும் உடையதாக ஒருநாடு திகழுமாயின் அது நன்னாடு ஆகும். (மொழிப் பயிற்சி - 27 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 20 பிப் 2011)

(இலக்கியப் பயன்பாடு)

  • வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை(குறள்.153)
  • மற்று நீ வன்மை பேசி (பெரியபு.தடுத்தாட். 70)
  • வாங்கினன் சீதையை யென்னும்வன்மையால் (கம்பரா. முதற்போ. 108)
  • உரம்பெறும் வன்மை(நன். 75)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம் தொகு

வன்மை
நாவன்மை, சொல்வன்மை
வண்மை, வலிமை, வல்லமை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்மை&oldid=1377214" இலிருந்து மீள்விக்கப்பட்டது