வருமொழி
பொருள்
வருமொழி(பெ)
- புணர்ந்த இணைச்சொற்களில் இரண்டாவதாய் நிற்கும் சொல்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the following or succeeding word in a compound
விளக்கம்
பயன்பாடு
- "தூய தமிழ்" என்பதில் தூய என்பது முற்றுப் பெறாத சொல், அது தமிழ் என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிகிறது. ஆதலின் இது பெயரெச்சமாகும். பெயரெச்சத்தில் (க்,ச், த், ப்) வல்லொற்று மிகாது. தூய தமிழ், ஆயகலை, தீயசிந்தை என்னும் எடுத்துக்காட்டுகள் காண்க.
- "யார்கொலோ முடியக் கண்டார்?" இத்தொடரில் முடிய என்னும் சொல்லோடு "க்" வல்லொற்று மிகுதல் ஏன்? தூய என்பதிலும் முடிய என்பதிலும் "அ" ஓசை உள்ளது. இதனை அகர ஈறு என்போம். இரண்டிலும் வருமொழியில் வல்லெழுத்து உள்ளது. ஏன் ஒன்றில் மிகவில்லை? ஒன்றில் மிகுகிறது? நிலைமொழி (தூய, முடிய) ஒரு தன்மைத்தாயினும், வருமொழி வேறுபடுகிறது. "தமிழ்' பெயர்ச்சொல். "கண்டார்' வினைச் சொல். முடிய என்னும் எச்சம் கண்டார் என்னும் வினை கொண்டு முடிதலின் இது வினையெச்சம்.
- அகரவீற்றுப் பெயரெச்சம் முன் வல்லொற்று மிகாது. அகர வீற்று வினையெச்சம் முன் வல்லொற்று மிகும். காயக் காண்பது, உலவச் சென்றான், வலியத் திணித்தார் என்பனவும் காண்க. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம், தினமணிக்கதிர், 28 Aug 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- நிலைவரு மொழிக ளியல்பொடு விகாரத் தியைவதுபுணர்ப்பே (நன். 151).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வருமொழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி