வாயாடி
வாயாடி (பெ)
- ஓயாமல் பேசுபவன்; வாயாடுபவர்; பேச்சுக்காரன்; பேச்சுவாயன்; பேசுவாயன்; அலப்புவோன்
- வாசாலகன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சின்ன வயதில் நான் பார்த்தபோது பேசாமல் ஊமை போலிருந்த அவளா இவ்வளவு பேசுகிறாள்? சரியான வாயாடி ஆகிவிட்டாளே!
- அவனுக்கு அவள் அத்தை மகளாக வேண்டும். நல்ல வாயாடி தண்ணீர் கொட்டுவது போல் சளசளவென்று பேசிக்கொண்டே இருப்பாள்([1])
- "ஐயா! நேற்றிரவு இங்கு நான் வந்து சேரும் வரையில் பேசத் தெரிந்தவளாக இருந்தேன். என்னை 'வாயாடி' என்று கூடச் சொல்வதுண்டு. முதன்மந்திரியின் அரண்மனையைப் பார்த்து இங்கு எனக்கு நடந்த இராஜோபசாரங்களைப் பார்த்ததும் பிரமித்து ஊமையாய்ப் போனேன்..." (பொன்னியின் செல்வன், கல்கி)
- வாயாடி பெண்ணாக வந்தாளே என் நெஞ்சை பந்தாடி சென்றாளே ."(திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாயாடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +