வாய்க்கரிசி
பொருள்
வாய்க்கரிசி(பெ)
- தகனத்தின் முன் உறவுமுறையோரால் பிரேதத்தின் வாயிலிடும் அரிசி
- இலஞ்சம்
- மனமில்லாமற் கொடுப்பது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- handful of rice dropped into the mouth of a deceased person by sons and other relations, just before cremation
- bribe, tip (Colloq.)
- anything unwillingly parted with (Loc)
விளக்கம்
பயன்பாடு
- என் தாய் வேளாளர் ( நீலகிரியின் படகர் இனப் பெண்). என் தந்தை பிராம்மணர். என் பொறியியல் குரு ஒரு நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவர். என் தந்தையை என் தாத்தா இறந்த போது வாய்க்கரிசி போடக் கூட அனுமதிக்கவில்லை என் மாமாக்கள். (வெறுப்பின் ஊற்றுமுகம்-மேலுமொரு கடிதம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- உனக்கு வாய்க்கரிசி தந்தேனுண்டிரு (அரிச். பு. காசிகா. 62)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +