வாரியல்
வாரியல்
பொருள்
- வீட்டில் தரையில் உள்ள அழுக்குகளையும் குப்பைகளையும் வாரிக் கூட்ட உதவும் விளக்குமாறு அல்லது துடைப்பம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- broom, broom-stick
விளக்கம்
- வாரியல் என்னும் சொல் துடைப்பம், விளக்குமாறு என்பதற்கு ஈடாகத் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் பொதுவாகப் பயன்படுத்தும் சொல். (வட்டார வழக்கு).
பயன்பாடு
- "கண்ட நாயெல்லாம் கஞ்சியிலே மண்ண வாரி போடுகத நான் குடிக்கணுமோ?" என்று அப்பா சொன்னார். "லே, மகாபாவி. ஏமானையா சொல்லுதே? அன்னம் போடுத ஏமானையாலே சொல்லுதே?" என்று வெறிகொண்டு பாய்ந்து வந்த தாத்தா கையில் கிடைத்த வாரியலால் அப்பாவை மாறி மாறி அடித்தார். உடம்பெல்லாம் வாரியல்குச்சிகள் குத்தி எரிய அப்பா குடிசைக்கு வெளியே சென்று குட்டித்தெங்கின் குழிக்குள் அமர்ந்துகொண்டார். (வணங்கான், ஜெயமோகன்)
- யார் வீட்டுக்குப் போனாலும் விசாலத்துக்கு என்று ஒரு வேலை இருக்கும். வாரியலை எடுத்து வீட்டைத் தூத்து ஒதுக்குவாள். (தவசி, நாஞ்சில்நாடன்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாரியல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற