சபா, சபை என்று வடசொற்களால் குறித்தவற்றை இந்நாளில் நாம் மன்றம், அரங்கம் என்று சொல்லி வருகிறோம். மன்றம் என்பது ஓர் அமைப்பையும், அரங்கம் என்பது விழா நடைபெறும் கூடத்தையும் பொதுவாகக் குறிக்கும். (மொழிப்பயிற்சி - 23: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 23 சன 2011)