மன்றம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மன்றம்(பெ)
- குறிப்பிட்ட நோக்கத்துடன் இயங்கும் குழு, அமைப்பு, கூட்டமைப்பு
- ஊர்/அரண்மனை/கட்டிடத்தினில் நடுவே அமைந்துள்ள இருக்கைகளுடன் கூடிய ஓர் அவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- association (as for literature); club (as for recreation, etc.); forum
- centre hall, auditorium
விளக்கம்
- சபா, சபை என்று வடசொற்களால் குறித்தவற்றை இந்நாளில் நாம் மன்றம், அரங்கம் என்று சொல்லி வருகிறோம். மன்றம் என்பது ஓர் அமைப்பையும், அரங்கம் என்பது விழா நடைபெறும் கூடத்தையும் பொதுவாகக் குறிக்கும் (மொழிப்பயிற்சி - 23: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 23 சன 2011)
- பழைய நாட்களில் மரத்தடியையும், தொழுவத்தையும் கூட மன்றம் என்றனர். அப்போதெல்லாம் மரத்தின் அடியில் (நிழலில்) பலர் கூடிப் பேசியிருந்தமையால்- பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்து - நாட்டாண்மையெல்லாம் - மரத்தடியில் நிகழ்ந்தமையால் மன்றம் எனும் சொல்லின் பொருள் பொருத்தமடைகிறது. ஆனால் தொழுவம் என்பது மாடுகளைக் கட்டும் இடம். மாட்டுத் தொழுவம் என்ற பொருள் இந்நாளின் மன்றத்தோடு பொருந்தவில்லை. (மொழிப்பயிற்சி - 23: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 23 சன 2011)
பயன்பாடு
- தமிழ் மன்றம்