தற்போதுள்ள தொகுப்பான் வசதிகள் அனைத்து விக்கிமீடியத் திட்டங்களுக்கும் பொதுவானது. இதே அடிப்படையில் பல ஆழிகள் (buttons=பொத்தான்கள்) உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், விக்சனரியின் தேவை நுடபமானதால், இத்தொகுப்பான் விரிவாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
பொதுவகத்தில் தொகுக்குறியீடுகள் தொகுத்தல் சாளரத்துக்குள்ளே தோன்றும் படி உள்ளது. அவ்வசதி இங்கிருந்தால் பங்களிப்பாளர் பலமுறை தொகுப்பானின் அடிப்புறம் செல்ல தங்களது சுட்டியை நகர்த்தத் தேவையில்லை. இதனால் மணிகட்டில் ஏற்படும் வலி தோன்றாது அல்லது வெகுவாகக் குறையும்.