விக்சனரி பேச்சு:கனடிய சொற்கோவைக் குழுவின் கலைச்சொற்கள்
- ஆரம்ப கட்ட உரையாடல்கள் இங்கு மாற்றப்படுகிறது.அதனால் அங்கு நீக்கப்பட்டது.
இவற்றிலும், ஆங்கில சிறிய எழுத்துக்களில் துவங்கும் சொற்கள் மறைந்துள்ளன.
- (எ. கா.) Alzheimer’s disease ஆங்கில பெரியஎழுத்துத் துவக்கம்
- ஆனால்,alzheimer’s disease என்பது சிறியஎழுத்தாக துவங்கி உள்ளது.
தீர்வு: மாகிர் ஆலமரத்தடியில் கூறிய ஆங்கில விக்சனரியின் Auto redirect வசதி இங்கு கொண்டு வரப்பட்டால் மிகவும் நல்லது. பங்களிப்பாளரின் நேரமும், தமிழ்விக்சனரியில் பிழைகள் ஏற்படும் சூழ்நிலையும் தவிர்க்கப்படும். இது குறித்து, மற்றவரின் கருத்தறிய ஆவல்.--00:01, 21 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Auto redirect வசதி
தொகுஅனைத்தும் ஆங்கில சிறிய எழுத்தாக மாற்றப்பட்டது. காரணம், Auto redirect வசதி இங்கு இல்லாததால், சிறிய எழுத்துமாற்றம் என்னால் ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே இருக்கும் 36 பதிவானச் சொற்கள் கண்டறியப்பட்டன. மீதமுள்ள 1890 சொற்கள் பதிவேற்றப்பட வேண்டியவை ஆகும். தங்களின் கருத்தினை பதிவு செய்ய வேண்டுகிறேன்.--00:50, 22 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- இந்த வசதி உருவாக்கப்பட்டால் சிறிய எழுத்து மாற்றம் தேவையில்லை. ஆனால் அது உருவாக்கபபட்டு சேர்க்கபப்டும் வரை இப்பதிவேற்றத்தை ஒத்திப் போட வேண்டாம். பிற விசயங்கள் (csv கோப்பு, csvloader நிரல் போன்றவை) தயாராக இருந்தால், பதிவேற்றத்தைத் தொடங்கி விடுங்கள். autoredirect உருவாக்கபப்ட்டபின் தானியங்கி மூலம், பெரிய எழுத்துகள் உள்ள வடிவங்களுக்கு நகர்த்திக் கொள்ளலாம்--Sodabottle 06:47, 22 மே 2011 (UTC)
தங்களின் ஆலோசனைக்கு நன்றி!சோ.பா.!!அனைத்தும் ஆயுத்த நிலையில் இருக்கின்றன. உங்களைப் போன்றே நானும் பதிவேற்றத்தை ஒத்திப்போட விரும்பவில்லை. எனினும், பிறரின் எண்ணங்களை அறிய ஆவல்.--15:33, 22 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- த.உழவன், நீங்கள் ஆயத்த நிலையில் (அணியமாக) இருப்பதால், ஏதும் காலத்தாழ்வு இன்றி பதிவேற்றிவிடுங்கள். ஏதும் தேவை இருந்தால் பின்னர் மாற்றிக்கொள்ளலாம். இவை ஒரு குறிப்பிட்ட பகுபுக்குள் வருமா? அப்படி வந்தால், பின்னர் தானியக்கமாக ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பின் செய்ய உதவியாக இருக்கும். --செல்வா 20:25, 22 மே 2011 (UTC)
முன்பு போல, இச்சொற்களை பகுப்பு:ஆங்கிலம்-கனடியக் கொடை எனப் பகுக்கலாமா?--00:24, 23 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- செய்யலாம் என நினைக்கின்றேன்.--செல்வா 00:30, 23 மே 2011 (UTC)
- அவ்வாறே செய்யுங்கள். நன்றி. பழ.கந்தசாமி 00:38, 23 மே 2011 (UTC)
- புதனன்று பதிவேற்றத்தை முடித்து விடுகிறேன். நாளை மாதிரி பதிவேற்றத்தை செய்து காண்பிக்கிறேன். --12:06, 23 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- வணக்கம் த.உ. தாமதாகக் கருத்துக் கூறுகிறேனோ தெரியவில்லை. கனடிய கொடை என்ற பகுப்பு தேவையற்றது. மேற்கோளில் சுட்டினாலே போதுமானது. துறைகளைச் சரியாகத் தருதல் கூடிய முக்கியம். --Natkeeran 23:30, 25 மே 2011 (UTC)
- அரங்கவியல்,ஆட்சியியல்,ஆதனவியல்,இயல்கள்,இலக்கணம்,இலக்கியம்,இன உறவு, ஊடகம், கல்வி, காப்புறுதி,
குடிவரவு, தாவரங்கள், பலசரக்கு,வங்கியியல்,வணிகவியல்,வாதங்கள் போன்ற பல துறைகள் உள்ளடக்கியதாக் கூறப்படுகிறது. அவை சரிவரக் கிடைப்பெறாததால், ஒரேயொரு பகுப்பாக உருவாக்கினோம். மேற்கோளில் எவ்வாறு சுட்டுவது? அதுதான் உகந்த முறையாக, எனக்கும் தோன்றுகிறது. துறைவாரியாகப் பிரிக்கப்படும் வரை, இதுவே எளிய வழி என எண்ணுகிறேன். தொடர்ந்து அக்குழாமிடமிருந்து, சொற்தரவுகளை, நாம் பெற முடியுமா? அது படத்தில் காட்டியபடி, அட்டவணைச் செயலியில் இருப்பின், தானியங்கிப் பதிவேற்றத்திற்கு நல்லது. மீண்டும் சந்திப்போம். வணக்கம்--00:07, 26 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- நன்றி த.உ. மேலதிக சொற்களை அவர்களிடம் இருந்து பெற முடியும் என்றே நினைக்கிறேன். --Natkeeran 03:40, 27 மே 2011 (UTC)
- மூலக் கோப்பை எக்சு வடிவுக்கு நீங்கள் கையாலேயேதான் (manual) செய்தீர்களா? இலகுவாக நாம் ஒரு நிரல் எழுதி இருக்கலாம்? --Natkeeran 03:42, 27 மே 2011 (UTC)
தானியங்கிப்பதிவேற்றம்
தொகு- பதிவேற்றத்தில் ஏதேனும் ஒத்தாசை வேண்டுமெனில் சொல்லுங்கள். (இப்போது awb ஓட்டி தானியங்கிப் பதிவேற்றத்தைக் கற்று வைத்துள்ளேன் :-)). --Sodabottle 14:35, 23 மே 2011 (UTC)
- பதிவேற்றுங்கள், அதே நேரம் மிக விரைவில் autoredirect ஏற்படுத்துவது பற்றி கருத்தில் எடுக்கவேண்டும். --சி. செந்தி 21:51, 23 மே 2011 (UTC)
- சோ.பா!நீங்கள் ஏற்கனவே பல சந்தேகங்களை எனக்குத் தெளிவுப்படுத்தியுள்ளீர்கள். அத்தெளிவுகள் இப்பதிவேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. சொற்கோவையைத் தானியங்கி வடிவத்திற்கு மாற்றுவதில் பல புதிய அனுபவங்கள் தோன்றின. குறிப்பாக அதன் வடிவும்;இத்திட்டப்பக்கத்தின் அதன் வடிவங்களை காட்டியுள்ளேன். அவை பற்றி பின்னர் தெரிவிக்கிறேன்.இத்திட்டப் பக்கத்தில் மாதிரி பதிவேற்றங்களைக் காட்டியுள்ளேன். வழமைப் போல பொதுத்தானியங்கியான தகவல் எந்திரன், பதிவேற்றியது. நாளை அனைத்துச் சொற்களையும் பதிவேற்றிவிடுவேன்.--09:09, 24 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- சில பக்கங்களில் உள்ளிணைப்பு சதுர அடைப்புகள் சரியாக வரவில்லை ஒரு newline character சதுர அடைப்பு முடிவுக்கு முன்பு இடையில் தோன்றுகிறது. csv கோப்பில் / csvloader நிரலில் இதைக் கொஞ்சம் சோதித்துக் கொள்ளுங்கள்--Sodabottle 11:01, 24 மே 2011 (UTC)
- சோ.பா! உங்களின் கூற்றினைக் கவனத்தில் எடுத்துப் பாரத்தேன். அவ்வழு வருகிறது. எனவே, த.இ.ப.வில் செய்தது போல, அத்தகைய அக இணைப்புகளை(சதுர அடைப்புகளை) இப்பொழுது ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் அது இருப்பின் சிறப்பாகும். மேல் விக்கியால் தரமான புதுச்சொல் உருவாக்கம் என்பதற்கான அலகுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மொத்த பைட்டுகளின் அளவு500-ஐத் தாண்டுவதால், அக இணைப்புகள் முக்கியத்துவம் சற்று, தற்காலிகமாகப் பின் தள்ளப் படலாம் என்றே கருதுகிறேன்.
- தானியங்கி செயற்படும் நேரத்தை வெகுவாகக் குறைக்க, உங்களது வழிகாட்டல் தேவைப்படும் என்றே எண்ணுகிறேன். சில முயற்சிகளுக்கு பின், தேவைப்படின் உங்களை நாளைத் தொடர்பு கொள்கிறேன். அநேகமாகக் காலை 10மணிக்கு மேல் 11மணிக்குள் தொடர்பு கொள்வேன். வரவிருக்கும் தடையாக நான் கருதுவது யாதெனில், மின்சாரமே. வழக்கமாக காலை6முதல்9 வரை நெடுநேரமின்தடை இருக்கும். அதற்கு பின் வரும் மின்சாரம், மதியம்1 மணிக்குள் இன்று மட்டும் 7 முறை தடைப்பட்டது.நாளை விடியல் நன்றாக இருக்குமென்றே எண்ணுகிறேன். பார்ப்போம். நாளை சந்திப்போம்.--17:09, 24 மே 2011
(UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- நேற்று இரவு அட்டவணைச்செயலியில் ஏற்பட்ட ஐயத்தை, உடன்நீக்கியமைக்கு மிக்க நன்றி!சோ.பா!! சோபாவில் உட்காருவது, எப்பொழுதும் சொகுசுதான்.!!! --05:50, 25 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- vlookup நிரல் வேலை செய்தது குறித்து சந்தோசம் :-). எனக்கு இங்கு open office இல் அதை சோதிக்க முடியவில்லையென்பதால், நிரலை மட்டும் உங்களுக்கு அனுப்ப வேண்டியதாயிற்று.--Sodabottle 06:11, 25 மே 2011 (UTC)
- நானும் open office தான் பயன்படுத்துவேன். csv loader எழுதிய கணேசு' அதுதான், தானியங்கிப் பணிக்கு சிறந்தது என்று, எனக்கு பயிற்சி அளிக்கும் போது கூறினார். நான் தான் கற்பதற்குள் அவரை கொஞ்சம் படுத்திவிட்டேன். கணக்கு என்றாலே எனக்கு ஒவ்வாமை தான். முதன்முதலில் அட்டவணைச் செயலியை, csv loader-ல் தான் எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேன். இன்னும் அதில் ஐயம் தீர்ந்தபாடில்லை. பிறகு வினவுகிறேன். --07:05, 25 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
விடுபட்டவைகள்
தொகு- தானியங்கி பதிவேற்றத்தில், சில விடுபட்டன.அவற்றினை, பதிவு செய்ய வேண்டும்.--07:47, 25 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தானியங்கிப்பதிவேற்றத்தில் விடுபட்டவை அனைத்தும் சீர் செய்யப்பட்டுவிட்டன.--18:20, 25 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தயந்து தலைப்பை கனடிய சொற்கோவைக் குழுவின் கலைச்சொற்கள் என்று மாற்றவும். --Natkeeran 03:39, 27 மே 2011 (UTC)
- சுட்டியமைக்கு நன்றி.முழுவிபரங்களும் அறிந்தவர் தாங்கள் என்பதால் சற்று விரிவாக திட்டபக்கத்தில் சற்று விரிவாக எழுதலாம். அவர்களை அவர் பணியில் ஊக்குவிக்க/நமக்கு உதவலாம். எதிர்காலத்தில் படத்தில் காட்டியபடி, தானியங்கி அட்டவணைச்செயலி வடிவத்தில் நமக்குத் தந்தால் நன்றாக இருக்கும். எதிர்நோக்கும்.--04:52, 27 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..