விரிப்பு
பொருள்
விரிப்பு(பெ)
- பாய், கம்பளம் முதலியவற்றை தரை முதலிய தளத்தின் மேல் விரித்து வைத்தல்
- அவ்வாறு விரிக்கப்படும் பாய். கம்பளம் முதலியன
- மலர்த்துகை
- பிளப்பு
- மாட்டுக் காய்ச்சல் வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- spreading of mat, carpet
- anything spread, as cloth; carpet; tablecloth; mat
- opening out
- opening; parting
- a fever of cattle
விளக்கம்
பயன்பாடு
- மேசைவிரிப்பு - tablecloth
- தரைவிரிப்பு - carpet
- படுக்கை விரிப்பு - bedspread
- வலை விரிப்பு - spreading the net
- கைவிரிப்பு - opening hands out signaling "no"
- கட்டிலில் படுக்கை விரிப்பு வெள்ளைவெளேரெனத் தூய்மையாக இருந்தது.
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விரிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +