வீராப்பு
வீராப்பு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- arrogance; pride
- braggadacio; boastful empty talk
விளக்கம்
பயன்பாடு
- ஆரம்பத்தில் சற்று வீராப்பாக இருந்த பானுமதி அம்மா பின்னர் இறங்கி வந்தார். மன்னிப்பு கோரினார். சரணாகதி அடைந்தார். (துணை, ஜெயமோகன்)
- மனம் உடைந்த பாண்டி தற்கொலை செய்துகொண்டால் என்ன என்ற எண்ணத்தை அடைகிறான். ஆனால் மறுகணமே ஏன் சாகவேண்டும் என்ற வீராப்பு எழுகிறது (அகமறியும் ஒளி, ஜெயமோகன்)
- பாட்டி, தான் சொன்னால் பேரன் மறுக்கமாட்டான் என்று பெண் வீட்டாரிடம் வீராப்பு பேசிவிட்டு வந்தவளுக்கு தன் தோல்வியை ஒத்துக்க முடியாமல் கொஞ்சநாள் குப்பனுடன் டூ விட்டு இருந்தாள். (குப்பனுக்கு கல்யாணம், திண்ணை)
- பொழைப்புத் தேடி வந்துட்டு இந்த வீராப்பு வெத்து வார்த்தைக்கு மட்டும் குறைச்சல் இல்லே. (விஸ்வரூபம், இரா.முருகன் திண்ணை)
- முதலில் அக்கம் பக்கத்து வீடுகளில் 'பாவம் கிழவர் தனியாக இருக்கிறாரே' என்று சாப்பாடு கொடுத்தனுப்ப முயற்சி செய்தார்கள். வீராப்பாக வேண்டாம்' என்று மறுத்தேன். யாராவது ஒருவராவது மறுபடி கேட்கக் கூடாதா? (கர்வம், இரா.இராமையா திண்ணை)
- மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
- மறுத்துப் பேசியோரை எல்லாம் ஏசி ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வீராப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +