பணிமனைகளில் விசியில் (bench) பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்படும் இக்கருவியின் தாடைகளுக்கு (jaws) இடையே பணித் துண்டை job வைத்து திருகின் துணை கொண்டு இறுக்கிவிட்டால் பணித் துண்டு ஆடாது; அசையாது !
... “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும் பாணாற்றுப் படை என்னும் இலக்கியத்தில் காணப்படும் வரி ! (வரி : 287). கதுவுதல் = கவ்வுதல். கதுவும் கருவி என்பதால் கதுவை.