பொருள்

இளிவு , .

  1. அவமானம்; இகழ்ச்சி
  2. இழிதகவு
  3. அருவருப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. disgrace, ridicule
  2. wretchedness, lowness in rank or character
  3. disgust
விளக்கம்
பயன்பாடு
  • இழிவு- இளிவு இரண்டும் ஒன்றா? திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இரு சொற்களையும் காணலாம். இரு சொற்களுக்கும் பொதுவான பொருள் ஒன்று உண்டு. அது தாழ்வு அல்லது கீழான எனும் பொருளாகும். ஆனால் இரு சொற்களுக்குமிடையே நுட்பமான பொருள் வேறுபாடு உண்டு. இழிதல் என்றால் இறங்குதல். மலையிலிருந்து அருவி கீழே இறங்கினால், "இழி தரும் அருவி' என்றனர். தலையின் இழிந்த மயிரனையர் என்றார் திருவள்ளுவர். தலையிலிருந்து கீழே இறங்கிய (கொட்டிய) மயிர் என்பது உவமை. அதற்கு என்ன மரியாதை உண்டு? அதுபோலவே தம் நிலையிலிருந்து கீழே இறங்கியவரும் (தாழ்ந்தவரும்) ஆவார் என்பது பொருள்.
  • ஆனால் இளிவு வேறு. எண் சுவையுடன் சாந்தம் என்று ஒன்று கூட்டி நவரசம் என்பர் வட நூலார். தொல்காப்பியம் உரைக்கும் மெய்ப்பாடுகள் எட்டுள் இளிவரல் என்பதும் ஒன்று.
  • "நகையே அழுகை இளிவரல் மருட்கை' என்று அந்த நூற்பா தொடங்குகிறது. இந்த இளிவரல் தான் இளிவு. இதன்பொருள் அருவருப்பு. திருக்குறளில், "இளிவரின் வாழாத மானமுடையார் ஒளிதொழு தேத்து முலகு' என்றும் குறட்பா மானம் அதிகாரத்துள் உள்ளது. மானக்கேடு நேர்ந்தால் வாழாதவர்கள் மானம் உடையவர்கள். இளிவு என்பது மானக்கேடு (அவமானம்) என்ற பொருளில் வந்தமை காண்க. நிலையிலிருந்து தாழ்ந்தாலும் (இழிவு), இளிவு எனும் மானக்கேடும் நுட்பான பொருள் வேறுபாடு கொண்டுள்ளமை அறிக. இழிவினும் கீழான அருவருப்பாவது இளிவு (கவிக்கோ ஞானச்செல்வன், மொழிப் பயிற்சி - 15: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, தினமணிக் கதிர், 21 நவ 2010)

(இலக்கியப் பயன்பாடு)

  • இளிவென்னு மேதப்பாடு (குறள்,464)
  • இரவும் பகலு மிளிவுடன் றரியாது (மணி. 6,68)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இளிவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மானம் - அவமானம் - இகழ்ச்சி - இழிவு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளிவு&oldid=1979661" இலிருந்து மீள்விக்கப்பட்டது