எடுபிடி
எடுபிடி (பெ)
- பெரிய பொறுப்பு ஏதும் இல்லாத சிறுசிறு, சில்லறை வேலை
- சிறுசிறு வேலைகள் செய்பவர்; சிறு பணியாள்; சித்தாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவர் ஒரு எடுபிடி ஊழியராக வேலைக்குச்சேர்ந்தார். சமையல், சுத்தப்படுத்துதல், நடிகர் நடிகைகளுக்குப் பணிவிடை செய்தல், உரிமையாளர் குழந்தைகளைப் பராமரிப்பது என எல்லா வேலைகளையும் அங்கே அவர் செய்தார். (டி.எம்.எஸ். மக்களின் பாடகன், ஷாஜி )
- வீட்டில் சமையலுக்கு ஒரு கிழவியும், எடுபிடி வேலை செய்ய ஒரு பிஹாரி பையாவும் இருக்கின்றனர் (வேருக்கு நீர், திருமதி ராஜம் கிருஷ்ணன் )
- அறம் மட்டும் அவர் கூட வந்தான். நம்பிக்கைக்குரிய உதவியாளன் என்று சொல்வது நாகரிகமாக இருக்கும். என்றாலும் எடுபிடி என்பதுதான் நிஜம்.காலைக் குளியலுக்குத் தண்ணீர் விளாவி வைப்பதிலிருந்து இரவு கால் அமுக்கி விடுவது வரை அவருக்கு அறம்தான் செய்ய வேண்டும். (அறம், மாலன் )
- நண்பரின் வேலையாளாக, காரியதரிசியாக, உதவியாளராக, எடுபிடியாக நான் செயல்பட்டேன். (பதற்றம், அ. முத்துலிங்கம் )
- கிராமங்களிலேயே தங்கிக் கொண்டு பக்கத்திலிருக்கும் நகரங்களில் சென்று கட்டட வேலைகள், கடைகள், ஹோட்டல்கள், பட்டறைகள் எனப்பலவற்றில் எடுபிடி வேலைகள், சில்லறை வேலைகள், சித்தாள் வேலைகள் எனப் பலவித வேலைகளைச் செய்யவும், சிறு சிறு வியாபாரங்களை மேற்கொள்ளவும் எனக் கிராமத்து மனிதர்கள் நகரத்தை நோக்கி நகரும் காட்சிகளைக் காண விருப்பம் இருந்தால் நகர்ப் பேருந்துகளில் காலைப் பயணங்களை மேற்கொள்ளலாம். (இலவசங்கள் தரும் இழிவுகள், அ.ராமசாமி )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எடுபிடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +