தமிழ் தொகு

 
போலந்தின் LM-60D 60mm கணையெக்கி
(கோப்பு)

பொருள் தொகு

  • கணையெக்கி, பெயர்ச்சொல்.
  1. முன் துவாரம் வழியாக எறிகணைகள் ஏற்றப்பட்டு, நேரடியாகக் குறிவைக்காமல், வான்நோக்கி சுடப்படும் கணையெக்கி. இதில் சாய்கோணத்தை மாற்றுவதன் மூலம் எறிகணையின் எறி பாதையை மாற்றி குறியை மாற்றலாம்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. mortar

விளக்கம் தொகு

கணையெக்கியானது எறிகணைகளை எக்கி ஏவும் ஆற்றல் வாய்ந்தது. ஆதலால் 'எறிகணை' என்னும் சொல்லில் உள்ள 'கணை' என்னும் விகுதியையும் 'எக்குதல்' என்னும் சொல்லின் எக்கு என்னும் வினைவடிவினை எடுத்து அதனை விகுதியோடு புணர்த்தி எக்கி என்றாக்கி இரு சொற்களும் புணர்க்கப்பட்டுள்ளது.

கணை + எக்கி = கணையெக்கி[1]

எக்குதல் என்னும் சொல்லுக்கு,

-மேலே செல்ல வீசுதல்

-உள்ளிழுத்தல்

-தாக்கி யூடுருவுதல்

ஆகிய பொருட்கள் உள்ளன. இவை mortar செய்யும் அத்தினை காரியத்தினையும் குறிக்கிறது. அதாவது மோட்டார் என்னும் ஆய்தமானது எறியங்களை உயரத்திற்கு செலுத்துவதில்லை ; மாறாக மிக குறுகிய தொலைவிற்கு மட்டுமே செலுத்துகிறது ( கூடியது 4.5கி.மீ). மேலும் அது மனித வலு இல்லாமல் தானகவே எக்கி எறியத்தினை செலுத்துகிறது. அந்த எறிகணையனது எதனையும் தாக்கி ஊடறுத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது. ஆகவே இச்சொல்லானது mortar என்னும் இங்கிலீசுச் சொல்லுக்கான சரியான தமிழாக்கமாகும்.

பயன்பாடு தொகு

  • ...பரந்தனில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 6 கணையெக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.

சொல்வளம் தொகு

வேட்டெஃகம் - துமுக்கி - இயந்திரச் சுடுகலன் - தெறாடி - தகரி -சேணேவி - படைக்கலம் - தெறுவேயம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணையெக்கி&oldid=1925853" இலிருந்து மீள்விக்கப்பட்டது