கண்டாமணி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கண்டாமணி(பெ)
- பெருமணி
- யானைக்கழுத்திற் கட்டும் மணி
- வீரக்கழல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தொலைவிலிருந்த பெரும் ஐஸ்கிரீம் கடையில் தொங்கிய பெரும் கண்டாமணியின் டணால் டணால் எனும் பேரோசை அவனது சிந்தனைகளை ஆமோதிப்பது போல ஒலித்தது… (நான்காவது கொலை, ஜெயமோகன்)
- நிலவொளியில் தூரத்தில் தெரியும் கோபுர கலசத்திலிருந்து கண்டாமணி ஓசை ஒலித்தது; வயல்வெளியை, வான வெளியைத் தாண்டி நீந்தி அலையலையாய் வந்த அந்த ஓசை அவனை 'வா வா ' என்று அழைத்தது. ... அவன் ஓடினான்; கண்டாமணி ஓசை ஒலித்துக் கொண்டே இருந்தது. (ஞானோதயம், ரகுநாதன்)
(இலக்கியப் பயன்பாடு)
- சேமக்கலம் . . .கண்டாமணி யதனொடு மடிப்ப (பிரபோத. 11, 41).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கண்டாமணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +