கருவேப்பிலை
-
கருவேப்பிலை மரம்
-
கருவேப்பிலைச் செடி
-
கருவேப்பிலையும், பழங்களும்
-
வெங்காரை(காட்டு கறியிலை)--பொருள்-3
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கருவேப்பிலை - (பெ) = கறி வேம்பு = கறிவேப்பிலை
- Bergera Koenigii (தாவரவியல் பெயர்)--பொருள் 1 & 2
- Murraya exotica (தாவரவியல் பெயர்)--பொருள் 3
- கறிவேம்பு + இலை = கூட்டுச்சொல்
பொருள்
தொகு- கருவேப்பிலை, பெயர்ச்சொல்.
- கறிவேம்பின் இலை (பதார்த்த. 523.)
- காண்க--- கறிவேம்பு (பேச்சு வழக்கு)
- ஒருசெடிவகை (L.)
- வெங்காரை(காட்டு கறியிலை)
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்கி) - curry leaf
- (இந்தி) - मीथ णीम पत्ता, करी पत्ता
- (தெலுங்கு) - కరివేపాకు
விளக்கம்
- கறிவேப்பிலை என்று அறியப்படும் இந்த இலைகள் கறி, சாம்பார், ரசம், கூட்டு போன்ற உணவுப் பொருட்களில் மணமும் சுவையும் ஊட்ட சேர்ப்பர்... இதைத் தனியாகவும் துவையல், தொக்கு, பொடி முதலியவன செய்து அன்னத்துடன் பிசைந்து உண்பர்...
- மருத்துவ குணங்கள்
கருவேப்பிலை அரோசிகம், சீதபேதியால் வரும் வயிறளைவு, புராணசுரம், பித்தம் , மந்தபசி, செறியாமை, வாந்தி, சூட்டால் ஏற்படும் ஓசையுடன் கூடிய மலக்கழிச்சல், குழந்தைகளுக்கு உண்டாகும் வாந்தி, ஓக்காளம் ஆகியனவற்றைக் குணப்படுத்தும்... இரைப்பைக்கு வலு சேர்த்தாலும், குடலில் வறட்சியை உண்டாக்கும்... ஆகவே இதைத் தனியாக உண்ணும்போது நெய்யை சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்ளல் நல்லது..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +