கிணற்றடிப் பிள்ளை
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- கிணற்றடிப் பிள்ளை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- word to word meaning > a child playing around an unprotected well
- conveying meaning> giving utmost look after, care, protection and attention
விளக்கம் தொகு
- இஃதொரு பேச்சு வழக்குச் சொற்றொடர்...மிகுந்த கவனமுடன், பாதுகாப்பாக ஒரு பிள்ளையை/அல்லது நபரை கவனித்துக் கொள்வதை/கொண்டதை இந்த சொற்றொடரால் குறிப்பிட்டுச் சொல்வர்...இது 'எப்படிச் சுற்றுச்சுவரில்லாத/பாதுகாப்பற்ற கிணற்றினருகே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை/சிறுவரை ஒரு தாயானவள் மிக எச்சரிக்கையாக, கண்ணும் கருத்துமாக நொடியும் பிசகாமல் கவனித்துக்கொள்வளோ அப்படி' என்னும் நீண்ட பொருள் தரும் வாக்கியமாகும்...
எடுத்துக்காட்டு தொகு
- என் மைத்துனன் தன் பிள்ளையை என்னிடம் விட்டுவிட்டு யாத்திரை சென்றுவிட்டார்...நானும் என் பிள்ளையைப்போலவே கிணற்றடிப் பிள்ளையாக, கண்ணும் கருத்துமாக அந்தக் குழந்தையைக் கவனித்துக்கொண்டேன்!...