குரு
உரிச்சொல்
தொகு- பொருள்
-
- நிறம், செந்நிறம்
- இலக்கணம்
-
- "குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே" - தொல்காப்பியம் 2-8-5
- இலக்கியம்
-
- குருத்துளி பொழிந்தது (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- "குருமயிர்ப் புருவை" (ஐங்குறுநூறு 238) = செம்மறியாடு
- "குரங்கின் தலைவன் குருமயிர்க் கடுவன்" (ஐங்குறுநூறு 275) = சம்முகக் குரங்கு
- "மேற்பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் னுன் குருக்கண், நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக் குலைப்பதன் தோற்றம் காண்" (கலித்தொகை 101-15)
- குருதி = உடலுக்குள் ஓடும் செம்புனல் (ஒப்புநோக்குக ஆ < ஆதி - ஆதிமந்தி, மரு < மருதி - ஆட்டனத்தியைக் காப்பாறியவள்
- விளக்கம்
-
- குரு என்னும் சொல் நிறச்செம்மையைக் குறிக்கும் சொல்லாட்சிகளை எண்ணும்போது நிறச்செம்மை உளச்செம்மையை உணர்த்தும் ஆகுபெயராக மாறிச் செம்மையானவராக விளங்கும் ஆசிரியரை உணர்த்தும் குரு என்னும் செந்தமிழ்ச் சொல்லாக அமைந்துள்ளது. இது வடசொல் அன்று.
- ஒப்புநோக்குக
பெயர்ச்சொல்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) குரு
- ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் (ப)
- ஆசான், குரவர்
- கொப்புளம், வேர்க்குரு
- (மத, சமய) ஆசாரியர், தலைவர்
- (கிறித்தவ வழக்கில்) இறைபணிக்கென்று திருநிலை பெற்றவர்
- (இயேசு கிறித்து) பெரிய குரு
- (வான்குறியியல், வானியல்) வியாழன் என்னும் கோள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- (ஆங்கிலம்) - teacher, master, preceptor
- blister, prickly heat
- priest, presbyter, high priest
- (in astrology, astronomy) Jupiter
விளக்கம்
குரு என்னும் சொல் தலைமை, மேன்மை, சிறப்பு, ஒளி என்னும் பல பொருள்களைத் தரும் வேரிலிருந்து தோன்றுவது.
பயன்பாடு
- மாதா, பிதா, குரு தெய்வம்.
- இன்றைய ஆய்வாளர் பலருக்கு இவர்தான் குரு.
- பரமார்த்த குருவும் ஐந்து சீடர்களும் மடத்துக்குச் சென்றபின்பு ஆற்றிலே தாங்கள் பட்ட அவதியைச் சொல்லித் திரிந்தார்கள் (பரமார்த்த குருவின் கதை)
- இப்போது கிறித்து தலைமைக் குருவாக வந்துள்ளார் (எபிரேயர் 9:11)திருவிவிலியம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குரு--- DDSA பதிப்பு + வின்சுலோ +